பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

105


எண்ணிக்கை, அந்த அணுவின் கோள் நிலையில் சுற்றி வரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையையும் அந்த எண்ணே சுட்டுகின்றது. எனவே, அணு எண் (Atomic number) என்ற இந்த எண்ணை அணுவின் உண்மையை எல்லாம் விளக்கி நிற்கும் ஒரு மந்திரமாகவே கொள்ளவேண்டும்.

இதுகாறும் நாம் அறிந்தவற்றைக் கருதும்போது, அணுவெல்லாம் அடிப்படையில் ஒரு தன்மையனவே என்பதை அறிகின்றோம். எலக்ட்ரான்களின் ஏ ற் ற க் கு றை வே வேற்றுமைக்கு அடிப்படை. எலக்ட்ரான்களின் (அல்லது புரோட்டான்களின்)எண்ணிக்கையைஏற்றவும் குறைக்கவும் கூடுமானால் ஒருவகையணுவை மற்றொருவகை அணுவாக்கலாம். செம்பையும் இரும்பையும் பொன்னாக்கலாம்; இரசவாதம் செய்யலாம். இந்த எண்ணத்தை அணு-எண் தருகின்றது. பண்டையோர் பேசி வந்த இரசவாதம் (Alchemy) இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்க வேண்டும். இதனால் மண்ணும் பொன்னும் ஒன்றாகின்றன. அடுப்புக் கரியும் வயிரமும் ஒன்றே என்று கூறும் அறிவியலறிஞரின் கருத்தும் இந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளது. இந்த உண்மையை நன்கு உணர்ந்த யோகியர் இரண்டையும் ஒன்றாகக் கருதும் உளத்தினைப் பெற்றுள்ளனர். இதனையே,

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்8

என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டிருப்பதை எண்ணி மகிழலாம். அறிவியலறிஞர்கள் என்ற இன்றைய சித்தர்கள் அணு அமைப்பினையே மாற்றிப் பொன்னை விட மிக விலையுயர்ந்த பொருள்களை யாக்குவதைக் காண்கின்றோம்.

எலக்ட்ரான்கள் அமையும் முறை: அணுவிலுள்ள எலக்ட்ரான் பல வட்டங்களில் சுழலுகின்றன என்று குறிப்பிட்டோம் அல்லவா? அவை ஒருவித கணக்கில் அமைந்துள்ளன என்பதையும் சுட்டினேன். இவற்றையும் ஈண்டு விளக்க முயல்கிறேன். இந்த விளக்கம் அணுவியல் கற்போருக்குப் பெருந்துணை புரியும். இந்த வட்டங்கள் வெவ்வேறு தூரங்களில் அமைந்துள்ளன. உட்கருவிற்கு அருகிலுள்ள மண்டலத்தில் இரண்டு


8. பெரி. புரா. செய்-143.