பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

107


இந்த எண்வரிசையில் ஒருவகைப் பொருத்தமும் காணப்படுகின்றது.

(1x1)2 = 2.12 = 2
(2 x 2)2 = 2.22 = 8
(3x3)2 = 2.32 = 18
(4×4)2 = 2.42 = 32

1, 2, 3, 4 என்ற நான்கின் மடக்கெண்களை (Squares} இரண்டால் பெருக்கிய தொகையாக இவை வருகின்றன. இந்த வட்டங்களில் முதல் நான்கு வட்டங்களே முழுதும் நிரம்பியுள்ளன. ஐந்து, ஆறு, ஏழு வட்டங்கள் கனமுள்ள அணுக்கள் வரும் வட்டங்களாகும். இவை முழுதும் நிரம்பியிருப்பதில்லை. இந்த மேல் நிலை வட்டங்களில் வெளிப்புறத்திலிருக்கும் மண்டலம் மேற்காட்டிய கணக்குப்படி 18 அல்லது 32 எலக்ட்ரான்களைக் கொண்டு விளங்கவேண்டும் என்றிருந்தாலும், எந்த வெளிப்புற வட்டத்திலும் 8 எலக்ட்ரான்களுக்குமேல் இருப்பதில்லை. ஒரு பொருளின் வேதி இயல்பு இந்த வெளிப்புற வட்டத்தினைக் கொண்டுதான் அறுதியிடப் பெறுகின்றது. விரிவஞ்சி இதனை விளக்கவில்லை.

உட்கரு அமைப்பு: உட்கரு அமைப்பை மேலே சிறிது விளக்கினேன். ஈண்டு மேலும் விளக்குவேன். இரண்டு வகைச் செங்கற்களால் கட்டப் பெற்ற வீடுபோல் எல்லா அணுக்களின் உட்கருக்களும் புரோட்டான்கள், நியூட்ரான்கள் என்ற இரண்டு வகைத் துணுக்குகளால்தான் அமைந்துள்ளன. உட்கருவின் சேறிவும் எம்மருங்கும் ஒருபடித்ததாகவே (Honaogeneons) உள்ளது. இந்தத் துணுக்குகள் யாவும் மிக இறுகப் பிணைக்கப் பெற்றுள்ளன. நாம் அறிந்த ஆற்றல்கள் அனைத்திலும் இவை பிணைந்திருக்கும் ஆற்றல்கள் மிகப் பெரியவை. இந்த ஆற்றலை உட்கருவின் பிணைப்பாற்றல் (Binding energy of the nucleus) என்று வழங்குவர். நடைமுறையில் இது அணுவாற்றல் (Atomic energy) என்று வழங்கப் பெறுகின்றது. அணுக்களிலுள்ள எலக்ட்ரான்களுக்கும் அவற்றின் உட்கருக்களுக்கும் இடையேயுள்ள மின்னாற்றலைவிட இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரிது; வன்மையும் வாய்ந்தது. இந்த ஆற்றலின் இயல்புகளையும் தன்மைகளையும் விளக்கும் பொருட்டு