பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அறிவியலறிஞர்கள் பல கோட்பாடுகளை வெளியிட்டுள்ளனர். ஆயினும், அவற்றுள் ஒன்றாவது இதுகாறும் அறியப் பெற்றுள்ள செய்திகள் அனைத்தையும் விளக்க வல்லது அன்று.

பின்னக் கணக்கில் எழுந்த ஆற்றல் நீரிய அணுவில் ஒரு புரோட்டானும் ஒர் எலக்ட்ரானும் அடங்கியுள்ளன என்று கூறினேன். எலக்ட்ரானைவிட புரோட்டான் 1840 மடங்கு எடை மிக்கது என்றேன். இந்த எடையைநோக்க எலக்ட்ரானின் எடையைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே, நீரிய அணுவின் எடையும் நீரிய உட்கருவின் எடையும் சமம் என்று கொள்வதால் தவறில்லை. இந்த நீரிய அணுக்கருவே எல்லாவகை அணுக்களுக்கும் அடிப்படை. இந்தக் கருவின் எடை 1.008 13 என்று தராதர எடைக் கணக்கில் கூறப்பெறுகின்றது. மேலுள்ள எடைகள் யாவும் முழு எண்ணாக இருக்க, இதுமட்டிலும் பின்னமாக இருக்கக் காரணம் என்ன?. யோசிக்க வேண்டியது தான். இந்த இம்மிக் கணக்கில்தான் உலகமே அடங்கிக் கிடக்கின்றது. இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவேன். இருகி (Deuteron) என்பது ஒரு புரோட்டானும் நியூட்ரானும் சேர்வதால் உண்டாகும் ஒர் எளிமையான அமைப்பினைக் கொண்ட ஒரு நீரிய உட்கரு. ஒரு புரோட்டானின் எடை 1.00813. ஒரு நியூட்ரானின் எடை 1.00 895. இவை இரண்டின் மொத்த எடை 2.0 171 ஆக இருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டும் ஒன்றாக இணைந்த இருநியின் எடை .0147தான். எடையில் 0.0024 காணப் பெறவில்லை. பொருண்மையில் 0.0024 எங்கோ மறைந்து விட்டது. இது 2.2. ஆயிரமாயிரம் எலக்ட்ரான் வோல்ட்டுக்குச்14 சமம்; அஃதாவது, 2,200, 000 வோல்ட்டுகளின்


10. எலக்ட்ரான் வோல்ட்டு : ஒர் எலக்ட்ரான் ஒரு வோல்ட்டு மின் அழுத்த வேற்றுமையில் (Potential difference) செல்லுங்கால் பெறும் ஆற்றலின் அளவு. இதனை W என்ற குறியீட்டால் வழங்குவர். அணுக்கருவிலுள்ள அணுக்களின் பிணைப்பாற்றல் இதைவிடப் பத்து இலட்சம் மடங்கு பெரியது. அணுவியலில் இந்த அளவின் பத்து இலட்சம் மடங்கு அளவைக் கையாளுவதே வழக்கமாக இருந்து வருகின்றது. 10 இலட்சம் W = 1 Mev. ஒரு MeV என்பது ஒரு துணுக்கு 10 இலட்சம் வோல்ட்டு மின் அழுத்த வேற்றுமையினிடையே செல்லுங்கால் ஏற்றுச் செல்லும் ஆற்றலின் அளவாகும்.