பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

109


ஆற்றலுக்கு ஈடானது. ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் இருகியாக ஆகும்பொழுது விடுவிக்கப்பெறும் ஆற்றல்தான் இது. மேற் கூறியபடி இந்த இரண்டு துணுக்குகளையும் பிரிக்க வேண்டுமாயின் அவற்றிலிருந்து விடுவிடுக்கப் பெற்ற ஆற்றலை மீண்டும் அளித்தாக வேண்டும்.அஃதாவது, அணுவின் உட்கருவிலுள்ள துணுக்குகள் ஒன்றாக இணையுங்கால் எவ்வளவு பொருண்மை குறைகின்றதோ அதற்கேற்ற அளவில் ஆற்றலைப் பயன்படுத்தினாலன்றி உட்கருவினைத் தகர்க்க முடியாது.

ஆல்ஃபாத் துணுக்கு என்பது அணு எண் 2 கொண்ட பரிதியத்தின் (Helium) உட்கருவாகும். இரண்டு புரோட்டான்களும், இரண்டு நியூட்ரான்களும் இணைந்தால் உண்டானது இது. இவற்றின் பொருண்மையைக் கூட்டினால் மொத்தம் 4.0342 ஆகும். ஆனால் ஆல்ஃபா துணுக்கின் பொருண்மை 4.001 தான். ஆற்றலாக உருமாறிய 0.0325 பொருண்மை எங்கோ மறைந்தது. இதற்கு ஈடான ஆற்றலின் அளவு 28,000,000 எலக்ட்ரான் வோல்ட்டு. இந்த அளவு ஆற்றலைப் பயன்படுத்தினாலன்றி அதன் உட்கருவைத் தகர்க்க முடியாது. ஆதலால்தான், ஆல்ஃபா துணுக்கு அவ்வளவு நிலைத்த தன்மையைப் பெற்றுள்ளது. கதிரியக்கமுள்ள பொருளின் உட்கரு வெடிக்கும் பொழுதுகூட ஆல்ஃபா துணுக்கு தகர்ந்து போவதில்லை; முழு ஆல்ஃபா துணுக்காகவே வெளிவருகின்றது.

மாயமாக மறைந்த ஆற்றல்: இருநிக் கரு அமைப்பிலும் பரிதியக் கரு அமைப்பிலும் ஆற்றல் மறைந்ததைக் கண்டோ மன்றோ? இந்த ஆற்றல் மறைவதற்குக் காரணம் என்ன? ஒடிப்போகும் சிறுவனை ஓடாது தடுத்துப் பிடித்துக் கொள்வதற்கு ஆற்றல் வேண்டுமல்லவா? ஒரேவித நேர்மின்னூட்டமுள்ள துணுக்குகள் ஒன்றையொன்று வெறுத்துத்தள்ளும் என்பது நாம் அறிந்த ஒன்று. அணுவின் உட்கருவில் நேர்மின்னூட்டம் பெற்ற புரோட்டான்கள் உள்ளன. இவை ஒன்றையொன்று வெறுத்துத் தள்ளிப் பிய்த்துக் கொண்டு போகாமல் ஒன்றாக