பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இயைய வைத்துத் திரட்ட ஆற்றல் வேண்டும். மறைந்த ஆற்றல் இதற்குச் செலவிடப்பெற்றுள்ளது. இதுவே புரோட்டான்களை அழுத்தி வைத்துக் கொண்டு கிடக்கின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கொண்டு இதனை விளக்குவேன்.

(1) இரண்டு தாள்களை ஒட்டுவதற்குத் திரவமாகக் கரைத்த கோந்து பயன்படுகின்ற்து. அவற்றிலுள்ள ஈரம் உலர்ந்ததும் அவை வன்மையாக ஒட்டிக் கொள்ளுகின்றன. அவ்விரண்டு தாள்களை மீண்டும் பிரிக்க வேண்டுமாயின், அவற்றை நனைத்தாக வேண்டும். அஃதாவது ஆவி உருவகத்தில் அவற்றினின்றும் (மாயமாக) மறைந்த நீரை மீண்டும் அத்தாள் கட்கு அளித்தாக வேண்டும். அவற்றை நணைப்பதற்கு வேண்டிய மிகக் குறைந்த அளவுள்ள நீரே அவ்விரண்டு தாள்களையும் ஒட்டுவதற்குப் பயன்பட்ட ஆற்றல் என்று உத்தேச மாகக் கூறலாம். இதே அளவு நீர்தான் கோந்து தாள்களை ஒட்டினபோது ஆவியாக மாறிற்று.

(2) கந்து வட்டிக் கந்தசாமி நகையை அடமானமாக வாங்கிக் கொண்டு கடனாகப் பணம் தருகின்றார். கந்தசாமியையும் நகையையும் பிரிக்க வேண்டுமானால் கடனாக வாங்கிய தொகை முழுவதையும் அவருக்குத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு அவர் கடன் கொடுத்த தொகை-அஃதாவது அவர்கையை விட்டுச் சென்ற தொகை - பெரிதாக உள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர் தம் கைக்கு வந்து சேர்ந்த நகையை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார். இங்குக் கந்தசாமியையும் நகையையும் பிணைத்த ஆற்றல் பணம். அதுபோலவே, அணுவின் உட்கருவில் அணுத்துணுக்குகளைப் பிணைத்த ஆற்றல்தான் அணுகுண்டின் திருவிளையாடலில் பங்கு கொண்டது. ஹிரோஷீமா, நாகாஸ்கி என்ற இரு ஜப்பான் நகரங்களையும் நாசமாக்கியது. பின்னக் கணக்கில் எழுந்த அணுகுண்டு இருநகரங்களையும் சின்ன பின்னப்படுத்தி விட்டது!

ஆற்றலின் மூலம்: கதிரவன்தான் ஆற்றல்களின் மூலம் (The sun is the ultimate source of energy).ஏராளமான ஒளி ஆற்றல், அல்லது கதிர்வீசு ஆற்றல், கதிரவனிடம் உற்பத்தியாகி விசும்பு வெளியைக் கடந்து விநாடிக்கு 1,86, 000 மைல் வீதம்