பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

113


எரியைகள்: நீள்சுருளிலுள்ள ஆற்றலை விடுவிப்பது போலவே, வேதியியல் ஆற்றலையும் விடுவிக்கலாம். அணுக்களுக் கிடையேயுள்ள கொக்கிகள் தளர்த்தப் பெற்றதும் ஆற்றல் வெளிப்படுகின்றது. தாவரப் பொருள்களைப் பொறுத்த மட்டிலும் இஃது எளிதாகின்றது; அவற்றைச் சூடாக்கிவிட்டாலே போதும். சூடு சேர்ந்ததும் அதன் சூட்டு நிலை உயருகின்றது; அஃதாவது அணுத்திரளைகளின் அதிர்வையும் (Vibration) இயக்கத்தையும் (Motion) அதிகரிக்கச் செய்கின்றது. இதுவே அணுத்திரளைகளைப் பிணைத்து வைத்திருக்கும் கொக்கிகளைத் தளர்வடையச் செய்கின்றது; இதனால் அணுத் திரளைகள் சிதைவடைந்து (Decompose) நீராவியாகவும் மரக் கரியாகவும் மாறுகின்றன. காற்றிலுள்ள உயிரியம் சேர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் நீராவி உயிரியத்துடன் சேர்ந்து நீராக மாறுகின்றது; கரி உயிரியத்துடன் சேர்ந்து கரியமில வாயுவாகின்றது. இது வேதியியல் கிரியையின் விளைவு. தாவரப் பொருள்களில் தீக்குச்சியைக் கிழித்து வைத்தால் அவை யாவும் எரிந்து விடுகின்றன. அவை கொழுந்து விட்டு சுவாலையுடன் எரிகின்றன. சுவாலையினின்றும் வரும் சூடு சேமித்து வைக்கப் பெற்ற வேதியியல் ஆற்றலிலிருந்து எழுகின்றது. இந்த வேதியியல் ஆற்றல் கதிரவனிடமிருந்து பெற்றதாகும். எரிதலில் (Combustion) வெளிப்பட்ட சூடு எரிந்த பொருள்களை உண்டாக்குவதற்குத் தாவரங்கள் கதிரவனிடமிருந்து பெற்ற ஒளியாற்றலுக்குச் சமமாகும் என்பது கவனத்துடன் செய்யப்பெற்ற சோதனைகளால் தெரிய வருகின்றது. எனவே, எரியைகள் (Fuels) மனிதனின் உடன்பயனுக்காக அமைந்த வேதியியல் ஆற்றலின் சேமிப்பிடங்களாகும். -

ஒரு காலத்தில் கட்டை (Wood) உலகெங்கும் எரியையாக இருந்தது. இன்றும் உலகில் சில பகுதிகளில் (எ-டு. குக்கிராமங்களிலும், குடிசைப் பகுதிகளிலும்) கட்டையையே எரியையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நவீன தொழிற்சாலைகளில் நிலக்கரிதான் பயன்படுத்தப்படுகின்றது. நிலக்கரி என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னர் சதுப்பு நிலங்களில் ஆழ்ந்து புதையுண்டு உருமாறிய கட்டையே. பன்னெடுங் காலத்திற்கு முன்னர் நிலத்தினடியில் புதையுண்ட கட்டையே பாறையாக மாறிய மண், மணல் அடுக்குகளில் அதிக அமுக்கத்திற்கும் குட்டிற்கும் உட்பட்டு சிதைவடைந்து இறுகி
த-8 -