பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


நிலக்கரியாக மாறியது. எனவே, நிலக்கரி என்பது பண்டைக் கதிரவன் ஒளிசேமித்து வைத்த வேதியியல் ஆற்றலாகும். கட்டையைவிட அஃது அதிக விலையுயர்ந்த எரியையாகப் பயன்படுகின்றது. காரணம், அஃது இறுகி அடர்வுடன் உள்ளது; அதில் சிறிதும் நீரோ காற்றோ இல்லை. ஒவ்வொரு இராத்தல் எடையிலும் அது கட்டையை விட அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. இது போலவே, பெட்ரோலியம் என்ற எண்ணெய்ப் பொருளும் மிக முக்கியமானது. பெட்ரோலியம் என்பது பல கோடியாண்டுகட்கு முன்னர் கடல் வாழ் சிற்றுயிர்களும் தாவரங்களும் பண்டைக் கடலினடியில் நசித்துச் சிதைந்து உருமாறியதன் விளைவே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு எரியைகளிலும் ஆற்றல் அதிகம் அடங்கியுள்ளது. அவற்றை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு எளிதில் கொண்டு செல்லலாம்; தேவைப்படுங்கால் கச்சிதமாக அவற்றிலிருந்து ஆற்றல் தேவையான அளவு கிடைக்குமாறும் செய்து கொள்ளலாம். அதுவும் தான் இயங்கியின் பொறியில் எண்ணெய் சொட்டுச் சொட்டாக விழும்படி செய்து கொள்ளவும் முடியும்.

உணவு வகைகள்: வேதியியல் முறையில் நோக்கினால் உணவு வகைகளும் எரியைகளே. காரணம், அவை விலங்குகளின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. உடல் வளர்ச்சிக்கும் தேய்விற்கும் வேண்டிய ஊட்டப் பொருள்களை அவை அளிக்கின்றன. என்றாலும், எல்லா உணவுகளிலும் பெரும்பகுதி ஆற்றல் கிடைப்பதற்காகவே எரிக்கப் பெறுகின்றன. எரியைகளைப்போல் அவை சுவாலையுடன் எரிவதில்லை. காரணம், உடலின் சூட்டு நிலையை அதிகரிக்காது 'எரிதலை-சரியாகச் சொன்னால்ஆக்ஸிகரணத்தை(Oxidation)- நடத்தி வைக்கும் வியத்தகு திறனை உடல் பெற்றுள்ளது. ஆனால், மரப் பொருள்களும் சருக்கரைப் பொருள்களும், கொழுப்புப் பொருள்களும் பிசிதங்களும் (Proteins) ஒரு பொறியினுள் எரியைகள் எரிவதுபோல்,உடலினுள் எரிந்துகொண்டிருக்கின்றன.அவற்றின் சிக்கலான அணுத்திரளைகள் எளிதானவைகளாக உடைக்கப் பெறுகின்றன. இவை நுரையீரல்களிலிருந்து குருதியோட்டத்தினால் கொண்டுவரப் பெறும் உயிரியத்தைத்