பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

115


தாக்கி அஃதுடன் சேர்ந்து கரியமிலவாயுவாகவும் நீராகவும் மாறுகின்றன. இந்த இரண்டு பொருள்களும் கழிவுப் பொருள்களாக அகற்றப் பெறுகின்றன. இந்தச் செயலில் உடலிலுள்ள தசையும் நரம்பணுக்களும் ஆற்றலைப் பெற்றுத் தம் வேலைகளைச் செய்து கொள்ளவும் உடலை வெப்ப நிலையில் வைத்திருக்கவும் -பயன்படுத்துகின்றன.

கருவிலடங்கிய ஆற்றல்: யுரேனியத்தின் உட்கருவில் தான் அதன் ஆற்றல் முழுவதும் அடங்கிக் கிடக்கின்றது என்பதை மேலே குறிப்பிட்டேன். அதனை ஈண்டு நினைவு கூர வேண்டுகிறேன். இவ்வாறு உறைந்து கிடந்த ஆற்றலை வெளிப்படுத்தித்தான் அணுகுண்டு ஆக்கப் பெற்றது. அணுவைப் பிளப்பது எளிதான செயல் அன்று. ஏனெனில் உட்கருவினைப் பிணைத்துக் கொண்டிருக்கும் அற்புதவிசை அளவற்றது. நம்முடைய கற்பனைக்கும் எட்டாத வலிவுடையது. இதைத் தவிர, உட்கருவினைச் சுற்றிச் 'சக்கர வியூகங்கள்' போன்ற பாதுகாப்பு முறைகள் பல வட்டங்களில் அமைந்துள்ளன. எனவே, யுரேனிய அணுவை (யு-235)ப் பிளக்க வேண்டுமானால் இந்த ஏழு 'சக்கர வியூகங்களையும்' கடந்து சென்று உட்கருவினை அடைதல் வேண்டும். வயிரத்தை வயிரத்தைக் கொண்டு அறுப்பது போலவே, அணுவும் அணுவின் பகுதிகளாகவுள்ள புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற அணுத்துகள்களை எய்பொருளாகக் கொண்டு அணு பிளக்கப் பெறுகின்றது. கன்னனிடமிருந்த அரவக்கணை வில்லில் வைத்து பெரு வேகத்துடன் எய்யப் பெற்றது போலவே, இந்த அணு ரவைகளும் (Atomic bullets)- சிறப்பாக நியூட்ரான்களும்-அணுச்சிதைக்கும் கருவிகளில் (Atom Smashers) வைத்து அணு என்ற இலக்கை நோக்கி எய்யப் பெறுகின்றன. சில சமயம் அவை உட்கருவினுள் புகுந்து அங்குள்ள பொருள்களை நாலாபுறங்களிலும் சிதறச் செய்து விடுகின்றன.

தொடர் நிலை விளைவு: ஒர் உட்கரு சிதைவுற்றால் சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் வெளி வரும். எவ்வளவு ஆற்றல் வெளிப்படும் என்பதைக் கண்டறிய ஐன்ஸ்டைன் கூறிய மந்திரம் பயன்படுகின்றது. E=mc2 என்பது அவர் கூறிய மந்திரம், இதில் E என்பது ஆற்றல், m என்பது