பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பொருண்மை; c என்பது ஒளியின் வேகம்; இது விநாடிக்கு 3 x 1010 செ.மீ. (1, 86,000 மைல்) வீதம் செல்லும். இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலைப் பெற ஒரு நிமிடத்தில் ஒரு பிடி மண்ணை ஆற்றலாக மாற்றும் உலையை அமைக்க முடிந்தால் அதிலிருந்து சுமார் பதினாயிரம் கோடி குதிரைத்திறன் (Horse power) அளவுள்ள ஆற்றலைப்பெறலாம். இது தற்சமயம் நம் நாட்டில் எல்லா வழியிலும் பெறப்படும் மொத்த மின்சார ஆற்றலின் அளவைக் காட்டிலும் பதினாயிரம் மடங்குக்குமேல் அதிகம். சிறிதளவே உள்ள பொருளிலிருந்தும் எவ்வளவு அதிகமான ஆற்றலைப் பெறலாம் என்பது இதிலிருந்து தெரிய வரும் ஓர் உண்மையாகும்.

ஒரு யுரேனியக் கருவை ஒரு நியூட்ரான் தாக்கினால் அக்கருவிலிருந்து மூன்று நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. அவை அருகிலுள்ள வேறு யுரேனிய அணுக்களைச் சிதைத்து பக்குவிடச்செய்கின்றன. எனவே, ஒரு நியூட்ரானால் துவக்கப்படும் இவ்விளைவு கோடிக் கணக்கான யுரேனிய அணுக்களைப் பிளந்து ஏராளமான ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இந்த ஆற்றல்தான் மெக்சிகோ பாலைவனத்தில் அமைக்கப் பெற்ற எஃகுக் கோபுரத்தைச் சிதைத்தழித்தது. இரண்டு ஜப்பான் நகரங்களையும் அழித்தொழித்தது.

கதிரியக்க ஐசோடோப்புகள்: அணுவின் கதை என்ற காவியத்தில் ஐசோடோப்புகளின் வரலாறு மிகவும் மகிழ்வூட்டத்தக்க பகுதியாகும். இதனை விரிவாக விளக்கக் காலம் இடந்தர வில்லை. எனினும், சுருக்கமாகக் கூறுவேன், நோய்வாய்ப் பட்டவர்களைக் குணப்படுத்தவும், நோய்களைப்பற்றி அதிகமாக அறிந்து கொள்ளவும், உற்பத்தித்துறைகளைத் திறனுடையதாக்கவும், பயிர்கள் அதிகமாகப் பலனைத் தரவும், கால் நடைப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள் போன்றவை அபிவிருத்தியடையவும் அவை பெரிதும் பயன்படுகின்றன.

பண்புகள்: கதிரிக்கமுள்ள ஐஸோடோப்புகளின் பண்புகளைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டால்தான் அவற்றின் பயன்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

முதற்பண்பு சிதைக்தழிதல். இவ்வாறு சிதைந்தழியுங்கால் துணுக்குகளையும் ஆற்றலையும் வெளியிட்ட வண்ணம் உள்ளன.