பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கதிரியக்க அயோடின் வீசும் கதிர்களால் சில இழையங்கள் அழிவுற்ற பிறகு அந்தச் சுரப்பியின் சுறுசுறுப்புக் குறைந்து சாதாரண நிலைக்கு வருகின்றது. தன் வேலை முடிந்ததும் கதிரியக்க அயோடின் பல்லைப் பிடுங்கின பாம்பைப்போல் தீங்கு செய்ய இயலாத நிலையை அடைந்து விடுகின்றது. பிணி நீங்கின நோயாளியும் உடல் நலத்துடன் என்றும் போலவே வாழ்ந்து வருகின்றான். இன்று கதிரியக்க அயோடின் வாய்வழியே பானமாகவும் கொடுக்கப் பெறுகின்றது. நோயை நீக்கியபின் அயோடின் கதிரியக்கத்தை இழந்து உடலில் ஐக்கியமாகி விடுகின்றது.

3. பாலிசைத்திவியா: பாலிசைத் தீமியா (Folycythemia) என்ற இந்நோய் குருதியில் ஒருகன மில்லி மீட்டருக்கு ஐம்பது இலட்சம் வீதம் இருக்க வேண்டிய சிவப்பு அணுக்களுக்கு மேல் மிகுதியாகப் பெருகுவதால் தோன்றுகின்றது. உடலில் சிவப்பு அணுக்கள் அதிகமாக இயற்றப்படுவதைத் தடுப்பதற்கு பாஸ்வரத்தின் ஐசோடோப்பு பயன்படுத்தப் பெற்று வெற்றி கண்டுள்ளனர். நாம் உண்ணும் உணவிலுள்ள பாஸ்வரம் உடலில் குருதியை இயற்றும் பகுதிகளாகிய எலும்பு மச்சை (Bone-marrow), மண்ணிரல் (Spleen) நிணநீர்ச்சுரப்பிகள் (Lymphatic glands) ஆகியவற்றிற்கு நேரே செல்லுகின்றது. பாஸ்வரத்தின் கதிரியக்க ஐசோடோப்புகளும் இப்பகுதிகளையே நாடிச் செல்லுகின்றன. அவை அங்குள்ள குருதிச் சிவப்பு அணுக்களை (Red corpuseles) சரமாரியாகத் தாக்கிச் சிதைக்கின்றன. இதனால் குருதியிலுள்ள சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து மெதுவாகச் சீரான விகிதத்திற்கு வந்து விடுகின்றது. இதனால் நோயாளி உடல் நலத்தை அடைகின்றார். பாஸ்வரம்-32 தான் இந்தச் சிகிச்சையில் பயன்படுகின்றது. குருதியில் ஏற்படும் வேறு கோளாறுகளும் இதனால் குணமடைகின்றன.

4. லூக்கீமியா (Leukemia): இந்தநோய் மேற்கூறப் பெற்ற பாலிசைத்தீமியாவை விட மிகவும் கொடுமையானது. அந்நோய்க்கு எதிரிடையானது, குருதியில் மட்டுமிஞ்சிய வெள்ளையணுக்கள் (White Corpuseles) உண்டானால் இந்நோய் தோன்றுகின்றது. இந்நோய் ஏற்படுவதற்குக் காரணம் தெரியவில்லை. தக்க முறையில் சிகிச்சை செய்து கொண்டே வந்தால் நோயாளி-