பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத்தென் போரும் உளரே.³

"செஞ்ஞாயிற்றினது விதியும் அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்பட்ட பார்வட்டமும் காற்றியங்கும் திக்கும் ஒராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்" என்ற புலவர் கூற்றில் அத்தகைய அறிஞர்கள் இருந்தமை பெறப்படுகின்றது.

இவ்விடத்தில் ஒன்றை நினைவிற் கொள்ளவேண்டும். பூமி தன்னைத்தானே சுற்றி கொள்வதற்கு ஒரு நாள் (24 மணி) ஆகின்றது; சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றுவதற்கு ஒரு மாதம் ஆகின்றது; பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு ஓராண்டுக் காலம் ஆகின்றது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வருதலை இராசி மண்டலம் என்று விளக்குவர் சோதிட நூலார். இதனைப் படம் விளக்குகின்றது. -

மீனம்
மேடம்
இடபம் மிதுனம்

கும்பம் கடகம்

இராசி மண்டலம்

மகரம் சிம்மம்

விருச் தனுசு 蠶 துலாம் கன்னி

5. புறம்-90 -