பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அணிந்திருக்கும் பட்டியிலுள்ள கதிர் வீச்சு பொறியில் அமைக்கப் பெற்றிருக்கும் கருவியில் தெரியும். இந்நிலையில் பொறியை நிறுத்திவிடக் கூடிய யுக்திசாதனத்தை அமைத்துப் பொறியை நின்று விடவும் செய்யலாம். எடுத்துக் காட்டாக, துளையிடுஇயந்திரத்தை(Punch press) இயக்குபவர்சரியான காலத்திற்குள்ளே தம் கைகளை வெளியே எடுக்கத் தவறினால் கையிலுள்ள மணிக்கட்டுப்படி (Wrist bond) யிலிருந்து வெளிப்படும் கதிர்கள் சிலகருவிகளை இயக்கி இயந்திரத்தை நிறுத்திவிடும்.

3.தேய்மானத்தை அறுதியிடல்: தேய்மானத்தை அறுதியிடுவதிலும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. இவை அன்றாட நடைமுறைச் செயல்களில் பயன்படாவிட்டாலும் உற்பத்தியாளர்கட்கு மிகவும் இன்றியமையாதவைகளாக உள்ளன. டிசெல் எண்ணெய்ப் பொறிகளிலும் காஸோயின் எண்ணெய்ப் பொறிகளிலும் உள்ள ஊடியங்கியிலுள்ள வ ளை யங் க ளி ன் தேய்மானத்தைக் காண்பதற்குக் கதிரியக்க ஐசோடோப்புகள் அதிகமாகப் பயன்படுகின்றன. இன்று அமெரிக்காவில் பல கம்பெனிகளில் இவை கையாளப் பெறுகின்றன. சோதனை செய்ய வேண்டிய பொறியின் பகுதியைஅணுஉலையில் வைத்துக் கதிரியக்கமுடையதாகச் செய்வர். பிறகு அதனை அதற்குரிய பொறியில் பொருத்திப் பொறியினை இயங்கும்படிச் செய்வர். பொறி இயங்கிக் கொண்டிருககும் பொழுதே அடிக்கடி வழுக்கிடு பொருளைச் சிறிது சிறிதாக எடுத்து அதிலுள்ள கதிரியக்க அளவு அறுதியிடப் பெறும்; இதிலிருந்து தேய்மானத்தின் அளவும் தீர்மானிக்கப்பெறும் தானியங்கித் தொழிற்சாலைகளிலும் அவற்றின் ஆராய்ச்சி நிலையங்களிலும் இம்முறை பெருவழக்காக உள்ளது. இவற்றை விவரித்தால் பெருகுமாதலின் இத்துடன் நிறுத்துகின்றேன்.

7. வானவியல்

இந்தப் பரந்த விண்வெளியில் கணக்கற்ற உலகங்கள் இயங்கி வருகின்றன. கதிரவன் வெளி எல்லைக்குள் சென்று கதிரவனை நாம் நோக்கினால் அஃது ஒரு சிறு மீனம் போலவே காட்சியளிக்கும். நெடுந்துாரம் வானிற் சென்றால் கதிரவனின்