பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் அறிவியல்-இன்று

131


சூரியனைச் சுற்றிக் கோள்கள் வட்டமிட்டு ஓடுவது போலவே, ஒவ்வொரு கோளையும் சிறிய கோள்கள் (Satellites) சுற்றியோடுகின்றன. அவற்றின் விவரம் வருமாறு:

கோள்கள்

சுற்றியோடும் சிறுகோள்கள்

சூரியன்

0

புதன்

0

வெள்ளி

0

பூமி

1

செவ்வாய்

2

வியாழன்

12

சனி

9

யுரேனஸ்

5

நெப்டியூன்

2

புளுட்டோ

0

---

மொத்தம் 31

இவற்றைத் 'துணைக் கோள்கள்’ என்று வழங்குவர். நமது பூமியைச் சந்திரன் இவ்வாறு ஒடிக் கொண்டுள்ளான். எனவே, பூமி சூரியனைச் சுற்றியும், சந்திரன் பூமியைச் சுற்றியும், ஆகவே, பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றியும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக் கொண்டுள்ளன.

சூரிய மண்டலத்திலுள்ள இக்கோள்களை வானநூல் கலைஞர்கள் மூன்று இனங்களாகப் பிரித்து வழங்குவர். முதல் வகுப்பிலுள்ளவை 'உள் நிலைக் கோள்கள்' (inner planets) என்று வழங்கப் பெறுகின்றன. இதில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் என்ற நான்கு கோள்களும் அடங்கும். இவை கதிரவனுக்கு மிக அண்மையிலிருத்தலின் இப்பெயரைப் பெறுகின்றன. இவை: பூமியைப் போல் குளிர்ந்து கெட்டியாக இருத்தலின் 'நிலக் கோள்கள்' (Terrestrial planets) என்றும் வழங்கப் பெறுகின்றன. இரண்டாவது வகுப்பைச் சேர்ந்தவை இடை நிலைக் கோள்களாகும். சிறு கோளத்திரள்கள் இவ்வினத்தைச் சேர்ந்தவை. மூன்றாவது வகுப்பைச் சேர்ந்தவை 'வெளி நிலைக் கோள்கள்' (Outer planets) என்ற பெயரால் வழங்குகின்றன. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என்பவை இவ்வினத்-