பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இந்த மூன்று பயணங்களிலும் சாட்டர்ன்-1 தான் விண்கலங்களை இயக்கியது.

அப்போலோ - 4: இதன் பயண ஒத்திகை நடைபெற்றபோது எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மூன்று விண்வெளி வீரர்கள் இறந்தனர். இந்தப் பயணத்திலிருந்து எல்லா அப்போலோ விண்வெளிக் கலங்களும் சாட்டர்ன்-5 என்ற மாபெரும் இராக்கெட்டுதான் பயன்படுத்தப் பெற்றது. இதிலும் அம்புலிப் பயணத்திற்கு முன்னர்ச் சோதிக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் மீண்டும் சோதித்துச் சரிபார்க்கப் பெற்றன.

அப்போலோ-5: இதன் பயணத்தில் அம்புலி ஊர்த்தியில் (டunar module) பல சோதனைகளை மேற்கொண்டு வெற்றி கண்டனர்.

அப்போலோ-6: இப்பயணத்தில் கட்டளைப் பகுதியும் பணிப்பகுதியும் கொண்ட இணைப்பு 4,00,000 அடி (120 கி.மீ) உயரத்தினின்றும் அம்புலியினின்று திரும்புங்கால், எந்த வேகத்தில் வருமோ, அதே வேகத்தில் காற்று மண்டலத்தில் நுழைந்தது. தவிர, அந்த விண்வெளிக் கலம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த இலக்கினின்றும் 80 கி. மீ. தொலைவில் இறங்கியது. 1969இல் மேற்கொள்வதாக இருந்த அம்புலிப் பயணத்தின் வெற்றிக்கு அறிகுறியாக இப்பயணம் அமைந்ததாக அறிஞர் உலகம் பாராட்டியது. அமெரிக்காவின் சலியாத உழைப்பையும் தொழில் நுணுக்கத் திறனையும் பாராட்டி மகிழ்ந்தது.

அப்போலோ-7 : இத்திட்டத்தில் இது முதன்முதலாக மேற்கொள்ளப் பெற்ற ஆளுள்ள பயணம் ஆகும். இந்தப் பயணம் கிட்டத்தட்ட பதினொரு நாட்கள் (381 மணி நேரம்) நீடித்தது (பூமியின் கற்று வழியில்). இதில் சென்ற மூன்று விண்வெளி வீரர்கள் சென்று வந்த தொலைவு எழுப்பத்திரண்டு கி. மீ. ஆகும்.திரும்பிய விண்வெளிக்கலமும் அட்லாண்டிக் மாக்கடலில் குறிப்பிடப் பெற்றிருந்த இடஇலக்கில் சரியாக வந்து இறங்கியது. அப்போலோ-8: அம்புலிக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் மனிதனே நேரடியாக விண்வெளிக்குச் சென்று