பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இறங்கிச் செல்லுமாறு தனியே இயக்கிச் செல்வர். இறங்கிய பிறகு அஃது அங்கிருந்து கிளம்பித் திரும்பி வந்து தாய்க் கலத்துடன் இணைதல் வேண்டும்.

இரண்டு கலங்களும் இணைவதற்காகச் சந்தித்தமை மிகவும் அழகு வாய்ந்த காட்சியாகும்; இரண்டும் இணைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இரண்டு கலங்களும் இணைந்த பிறகு அம்புலி ஊர்தியின் விண்வெளி வீரர்கள் இருவரும் தாய்க்கலத்திற்கு வந்து சேர்ந்தனர். இனி, அம்புலி ஊர்திக்கு யாதொரு வேலையும் இல்லை. ஆகவே, அதனைக் சுழற்றி விட்டனர். அம்புலி ஊர்தியின் அமைப்பு விண்வெளியிலும் சந்திரன் தரையிலும்தான் இயங்கும் படி அமைந்திருக்கும். அதில் வெப்பம் தாங்கும் கவசம் இல்லை. ஆகவே அது பூமிக்குத் திரும்பிவர முடியாது. அப்படி வந்தாலும் அது காற்று மண்டல உராய்வால் எரிந்து போகும் பயணத்தின் ஆறாம் நாளிலிருந்து ஒன்பதாம் நாள் முடிய எதிர் காலத்தில் சந்திர மண்டலத்திலிருந்து திரும்புங்கால் செய்யவேண்டியவற்றையெல்லாம் செய்து பார்த்தனர். பயணத்தின் பத்தாம் நாள் தாய்க்கலம் பூமியின் சுற்றுவழியிலிருந்து விடுபட்டு அதன் வளிமண்டலத்தில் நுழைந்தது. இப்போது பணிப் பகுதியும் கழற்றிவிடப் பெற்றது. கட்டளைப் பகுதி அடங்கியகலம் விரைவில் அட்லாண்டிக் மாக்கடலில் குறிப்பிட்ட இலக்கில் வந்து இறங்கியது.

அப்போலோ-10: அடுத்து நிகழவிருக்கும்(அப்போலோ-11. பயணம்) விண்வெளிப் பயணத்தில் திங்களுக்கு 15.8 கி.மீ. தொலைவில், அம்புலி ஊர்தி திங்களைச் சுற்றிய நிலையில், இரண்டு விண்வெளி வீரர்கள், பாதுகாப்பாகத் திங்களில் இறங்குவதற்குரிய நல்ல இடத்தைக் கண்டறிவதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இப்பயணம் 8 நாள் 5 நிமிடத்தில் நிறைவு பெற்றது. அப்போலோ-10 அம்புலியை அடைய 72 மணி நேரம் ஆயிற்று. அங்கிருந்து பூமிக்குத் திரும்புவதற்கு 54 மணி நேரம் ஆயிற்று.

இப்பயணத்தில் திங்களின் குழ்நிலையில் அப்போலோ கலம்-10 முற்றிலும் நன்கு சோதிக்கப் பெற்றது. அடுத்து வரும் பயணங்களில் அம்புலியில் இறங்குவதற்கு முன்ன்ர் இந்தச்