பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

159


கின்றன. இந்நிலையில் குழந்தையின் பால் (Sex) இன்னதெனக் கூறிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து 40-வது வாரம் வரையில் (10 மாதம் வரையில் -Lunar months) வளர்ச்சி நடைபெறுகின்றது. பிறக்கும் நிலையில் குழந்தை 20 அங்-நீளமும் கிட்டத் தட்ட 7 பவுண்டு எடையும் உள்ளது. இங்ஙனம் ஒன்பது மாதத்திற்குள் ஒற்றையணு கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட உடலாக வளர்ந்துவிடுகின்றது. தாய் கருவுயிர்க்கும் காலத்தில் குழந்தை கருப்பையில் நேராகத் தொட்டுக் கொண்டிருப்பதில்லை. தொடக்கத்திலிருந்தே பாய்மம் நிரம்பிய பையில் குழந்தை துளாவிக் கொண்டு வளர்ந்து வருகின்றது. இந்தப் பனிக்குடத்தில் (Bag of waters) உண்டாகும் நீரும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். இந்த நீர் குழந்தைக்குப் பாதுகாப்பாக அமைந்திருப்பதுடன், குழந்தைக்கு யாதொரு அதிர்ச்சியும் ஏற்படா வண்ணம் காக்கின்றது.

குழந்தைக்கு ஊட்டம்: நஞ்சுப் பகுதியே தாயையும் சேயையும் இணைக்கும் பகுதியே என்பதை அறிவோம். இங்குத்தான் தாயின் குருதியும் சேயின் குருதியும் ஒன்றோடொன்று இரண்டறக் கலக்காமல் சித்தாந்த தத்துவம் போல் மிக நெருங்கியுள்ளன. நஞ்சுக்கொடி தாயின் குருதியோட்டத்தையும் சேயின் குருதியோட்டத்தையும் பிரிக்கின்றது. ஆனால், ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் சில பொருள்கள் இந்தச் சுவரை ஊடுருவிச் செல்லக் கூடும். ஊட்டமும் கழிவுப் பொருள்களின் நீக்கமும் பரிமாறிக் கொள்ளப் பெறுகின்றது. குழந்தை தாயினிடமிருந்து ஊட்டப் பொருள்களைப் பெறுகின்றது;கழிவுப் பொருள்களை தாயினிடம் அகற்றி விடுகின்றது. ஒன்பது மாதக் கருப்பை வாழ்க்கையிலும் சேய் தாயின் குருதியிலிருந்தே உயிரியம் (Oxygen) உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கழிவுப் பொருள்களை அந்தக் குருதி வட்டத்திலேயே கழித்துவிடுகின்றது. இந்த இடத்தில்,

கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்
விருப்புற் றமுதளிக்கும் மெய்யன்

என்ற தனிப்பாட்டடிகள் சிந்திக்கத் தக்கவை.

முழு வளர்ச்சி பெற்ற நஞ்சு தட்டையான முட்டை வடிவத்தில் இருக்கும். அதன் குறுக்களவு எட்டு அங்குலமும் எடை ஒரு