பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பவுண்டிற்கு மேலும் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு இது கருப்பையிலிருந்து அகற்றப் பெறுவதால் இது பின்னிலைப் பிரசவம்’ (After birth) என்று வழங்கப் பெறுகின்றது. இளஞ்சூல் நஞ்சுக் கொடியுடன் இணைக்கும் உறுப்பே 'கொப்பூழ்க் கொடி’ என்பது. இந்தக் கொடியின் நீளம் இரண்டடி; கனம் ஒன்றரை அங்குலம். இது குழந்தையின் அடி வயிற்றிலிருந்து தொடங்கி நஞ்சுக் கொடியுடன் இணையும். இதில் குருதிக் குழல்கள் உள்ளன. இக்குழல்களின் வழியாகவே குழந்தையின் குருதியோட்டம் நஞ்சுக்கொடிக்கு வருகின்றது. தாய் கருவுயிர்த்ததும் சுொப்பூழ்க் கொடியை நறுக்கித் தாயின் இணைப்பிலிருந்து புனிற்றிளாய் குழவியைப் பிரிப்பர். இவ்வாறு தாயுடன் இணைக்கப் பெற்றிருக்கும் பகுதியே பின்னர்க் குழந்தையின் கொப்பூழாகின்றது.

(ஆ) கருவுயிர்த்தல்: முழுவளர்ச்சி பெற்ற குழந்தையை கருப்பையினின்றும் வெளியே தள்ளுகின்ற நிகழ்ச்சிதான் 'கருவுயிர்த்தல்' என்று வழங்கப் பெறுகின்றது. இது நிகழ்வதனை மூன்று நிலைகளாகப் பிரித்துக் கூறலாம்.

முதல் நிலை: கருப்பை சுருங்கத் தொடங்கி வலிதோன்றியதிலிருந்து கருப்பையின் வாய் நன்றாக விரிந்து குழந்தையைவெளித் தள்ளுவதற்கு ஏற்ற நிலையை அடையும் வரையிலும் உள்ள நிலையே 'முதல் நிலை' எனப்படும். தொடக்கத்தில் வலி அரைமணி நேரத்திற்கொரு முறை வந்து கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக வலி பதினைந்து நிமிடத்திற்கொருமுறை, ஐந்து நிமிடத்திற்கொருமுறை என்று அடுத்தடுத்து ஏற்படுகின்றது. தொடக்கத்தில் இடுப்பின் பின்பகுதியில் இரண்டு. ஆசனங்களும் சேரும் இடத்தில் அதிக வலி ஏற்படும். இப்பொழுது இனிமா கொடுத்துக் குடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வலி தொடங்கிச் சிறிது நேரம் சென்றதும் கருப்பிணி இந்த வலி முன் வயிறு, பின் இடுப்பு முதலில் எல்லாப் பாகத்திலும் சமமாகப் பரவியுள்ளதை உணர்வாள்.

பிரசவ வேதனை அதிகமானதும் சிலருக்கு வயிற்றுக் குமட்டலும் வாந்தியும் வருவதுண்டு. சிலருக்கு அடிக்கடிச்சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. ஒவ்வொரு வலியின் பொழுதும் கருப்பையின் வாய் (Cervix) மிருதுவாகி