பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

161


நன்றாக விரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றது. பிரசவ வேதனை தொடங்கிச் சில மணி நேரத்தில் கருப்பையின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் சளி போன்ற பொருள் கழன்று சிறிது குருதியுடன் வெளிவரும். இதை மருத்துவர்கள் "ஷோ" என்பர்.வீட்டினுள் மூத்தோர் 'தீட்டு’கண்டுவிட்டதாகக் கூறுவர். இவ்வாறு வெளிப்படும் குருதி கொஞ்சமாகவே இருக்கும். அங்ஙனமின்றிப் பெண்ணுறுப்பினின்றும் குருதி குபுகுபெனப் பாய்ந்து வந்தால் முன்னடைப்பு நஞ்சு போன்ற கோளாறுகள் ஏற்பட்டதாக உணரவேண்டும்.

அதிகமாகிக் கொண்டிருக்கும் வலியினால் கருப்பை இரண்டுபாகமாகிவிடுகின்றது.கீழ்ப்பாகம் மெலிந்தும் மேற்பாகம் தடித்தும் மாறிக் கொள்ளுகின்றது. தடித்த மேற்பகுதி குழந்தையை உந்திக்குக்கீழ்நோக்கித்தள்ளுகிறது. கருப்பையின் தசைகள் சுருங்கும் பொழுது கருப்பைக்குள் ஒரு பெரிய அழுத்தம் ஏற்படுகின்றது. இந்த அழுத்தம் குழந்தையை நாலாபக்கமும் அமுக்கி வெளியே தள்ளுகின்றது. கருப்பையின் அழுத்தத்தின் ஆற்றல் ஒரு பெரிய பயில்வானின் பிடிப்பின் உறுதியைவிட நான்கு மடங்கு மிக்கது என்று துணிந்து கூறலாம். ஒவ்வொரு வலியின் பொழுதும் மேற்பாகத்தினின்றும் தள்ளப்பெறும் குழந்தை கருப்பையின் கீழ்ப்பாகத்திற்கு நகர்ந்து வருகின்றது. அப்பொழுது கருப்பையின் கழுத்தும் ஒவ்வொரு நோவின் பொழுதும் மிருதுவாகி அகன்று கீழ்நோக்கி வந்து கொண்டிருக்கும் குழந்தைக்கு வழிவிடுகின்றது. இந்நிலையில் கருப்பையின் வாயும் விரிந்து கொண்டே போகின்றது. இவ்வாறு ஒவ்வொரு சமயமும் சிறிது சிறிதாக அகன்று கொண்டே சென்று வாயின் அகலமும் யோனியின் அகலமும் ஒரே அளவாகி இரண்டும் ஒன்றாகி விடுகின்றன. பனிக்குடத்தில் தேங்கியுள்ள நீர் பலமாக அமுக்குவதனாலும், கருப்பை வேகமாகச் சுருங்கி விரிவதாலும் உதய பாகம் அமுக்குவதாலும் கருப் பையின் வாய் நன்கு அகன்று கொள்ளுகின்றது. வாய் முற்றிலும் விரிந்ததும் பனிக்குடம் உடைந்து உள்ளிருக்கும் நீர் வெளியேறுகின்றது. இத்தனைச் செயல்களும் நடைபெறுவதற்கு முதற்பிரசவத்தில் பதினான்கு நேரமும் அடுத்து நிகழும் பிரசவத்தில் ஆறு மணி ஆகின்றன.

த-11