பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


சில சமயம் பனிக்குடம் வலி தொடங்கிய உடனேயோ அல்லது அது தொடங்கும் முன்னரோ உடைந்து விடுவதுண்டு. இப்பொழுது பனிக்குடநீர் முழுதும் வெளியேறி விடுவதால் அடுத்து நிகழும் குழந்தைப் பிரசவம் உலர்ந்த பிள்ளைப் பேறு' (Dry labour) என வழங்கப் பெறுகின்றது. பனிக்குடத்தின் விரியச் செய்யும் இந்நிலையில் ஆற்றல் இல்லாது போவதால் பிரசவம் ஒரு சிறிது சிரமமாகப் போவதுடன் பிரசவ காலமும் நீடிக்கின்றது.

இரண்டாம் நிலை: குழந்தை வெளியே தள்ளப்பெறும் இந்நிலையில் சாதாரணமாகத் தலை முதலிலும்? ஏனைய உடலுறுப்புகள் அடுத்தும் வெளியே வருகின்றன. இப்பொழுது பிரசவ வேதனை மிகவும் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கும். குழந்தையை வெளியேற்றும் முயற்சியில், ஒரு பெரிய மூட்டையை வீட்டிலிருந்து வெளியே தள்ளமுடியாமல் திண்டாடும் பொழுது அருகிலிருப்போரில் சிலர் தள்ளுவதற்கு உதவுவது போல, வயிற்றுத் தசைகளும், நுரையீரல்களின் அடியில் காணப்பெறும் விதானமும் (Diaphram) கருப்பையுடன் ஒத்து ஒவ்வொரு வலியின் பொழுதும் சுருங்கி விரிந்து துணை செய்கின்றன. இப்பொழுது கருப்பிணிக்கு முக்கினால் ஆறுதலாக இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படும். அதனால் கருப்பிணி முக்குவாள். கருப்பையினின்றும் நன்றாக விரிந்து கொண்டுள்ள அதன் வாயின் வழியாக யோனிக் குழலில் குழந்தை ஒவ்வொரு நோவின் பொழுதும் சிறிது சிறிதாக இறங்கிக் கொண்டு வரும். அதற்கேற்றவாறு யோனிக் குழலும் அகன்று விரிந்து கொடுக்கும்.

கீழே இறங்கி வரும் குழந்தையின் தலையைச் சுற்றியுள்ள பிறப்புறுப்புகளின் தசைகள் நெகிழ்ந்து இடங்கொடுக்கின்றன. இச்சமயம் வலி மேலும் வேகமாகவும் கடுமையாகவும் தொடர்ந்தும் உண்டாகும். கீழே இறங்கி வருங்கால் குழந்தையின் உதய பாகம் நன்றாக அமுக்குவதனால் இரண்டு தொடைகள், ஆசனவாய் (Aenus) பெண் உறுப்பு இவற்றிற்கு இடையேயுள்ள பக்கம் உப்பிக் கொண்டு கிழிந்து விடும்போல், தோற்றமளிக்கும். குழந்தை யோனி வாயை அடைந்ததும் கருவுயிர்க்கும் பெண்ணுக்கு மலங்கழிக்க வேண்டுவது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படும் (இதற்காகத்தான் முன்ன்ரே இனிமா