பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

163



கொடுத்து மலக்குடல் சுத்தமாக்கப்பெறுகின்றது). குழந்தையின் உதயபாகம் மலக்குடலை அமுக்குவதனால் இந்த உணர்ச்சி தோன்றுகின்றது. யோனியின் வாயினின்றும் குழந்தையின் தலை வெளிப்பட்டதும் கருப்பிணி நோவு தாங்க முடியாமல் சில சமயம் வாய்விட்டுக் கூச்சலிடுவதுமுண்டு. முதலில் குழந்தை யின் முகம் தாயின் ஆசனத்தை நோக்கியும் தலையின்பின் பாகம் மேல் நோக்கியும் இருக்கும். கழுத்துவரை வெளிவந்ததும் குழந்தை தானாகவே இடப்புறமோ வலப்புறமோ தலையைச் சிறிதளவு திருப்பிக் கொள்ளும். இதைத்தான் மூத்தோர்கள் 'தலை திரும்புகிறது' என்பர். குழந்தையின் தலை வெளியே வருங்கால் அதனுடைய மூக்கு, வாய் இவற்றினின்றும் கோழை சிறிதளவு கசிவதுண்டு. தலைவந்து திரும்பியதும் தோள்கள், உடல், ஆசனம், கால்கள் என ஒவ்வொரு உறுப்பும் வேகமாக வெளியே நழுவித் தாமாகவே வந்துவிடுகின்றன. இச்செயல் நடைபெற முதல் பிரசவத்தில் இரண்டுமணி நேரமும் , அடுத் தடுத்து நிகழும் பிரசவங்களில் அரைமணி நேரமும் ஆகலாம். குழந்தை முற்றிலும் வெளிவந்த பிறகும் அது தாயுடன் கொப்பூழ்க் கொடிமூலம் ஒட்டிக் கொண்டிருக்கும்; இக்கொடி தாயின் நஞ்சுக் கொடியுடன் கருப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கும். கொப்பூழ்க் கொடியில் குருதியோட்டம் நின்றதும் அதை நறுக்கித் தாயினிடமிருந்து சேய் பிரிக்கப் பெறும்.

மூன்றாம் நிலை: நஞ்சுக் கொடியும் குழந்தையைச் சுற்றிக் கொண்டிருந்த சவ்வும் வெளிவருவது இந்நிலையில்தான். குழந்தை வெளிவந்ததும் கருப்பிணி சிரமம் தணிந்து பெரு மூச்சு விடுவாள். சில சமயம் சிலருக்குக் களைப்பு மிகுதியால் உறக்கம் வருவது முண்டு. குழந்தை வெளிவந்ததும் கருப்பை யின் உயரம் கொப்பூழுக்குச் சிறிது மேல்வரை இருக்கும்; சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கருப்பை மீண்டும் மெல்ல மெல்லச் சுருங்கி விரியத் தொடங்குகின்றது. இப் பொழுது சுமார் அரைமணி நேரம் ஏற்படும் வலி முன்னதைப் போன்று அவ்வளவு கடுமையாக இராது. அத்துடன் சிறிது அளவு குருதியும் வெளிப்படுகின்றது. கருப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நஞ்சு மெல்லப் பிரிந்து கருப்பை சுருங்கி வருவதனால் அது கீழே தள்ளப் பெற்று வெளியே வந்து விழுகின்றது. அஃதுடன் குருதியும் சிறிதளவு வெளியே கொட்டு-