பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

15


'மகரத்வஜன்’ என்றும், தென்மொழியில் 'சுறவக் கொடியோன்' என்றும் பெயர்கள் உண்டு.

மலைக் குறவர்கள் இரத்தின வாணிகம் நடத்துவது அற்புதம். வானத்தில் நிறைகோல் வடிவமான துலாராசி காணப்படுகின்றது. அதைக் கொண்டு தாம் சேகரித்து வைத்திருக்கும் பிரகாசிக்கும் இரத்தினக் கற்களை வைத்து எடை காண்கின்றனர்.

மன்னு குடிக்குறவர் வானூர் துலாத்திடையே
மின்னு மணிநிறுக்கும் வேங்கடமே! (20)

என்பது திவ்வியகவி காட்டும் சொல்லோவியம். இந்தக்குறவர்களைக்கொண்டு இன்னொரு காட்சியையும் காட்டுவர் திவ்வியகவி. தினைப்புனத்தைக் காக்கின்ற குறவர்கள் தண்மதியில் களங்கத் தோற்றமாக இலங்கும் மான்வடிவத்தைக் காண்கின்றனர். அதைத் தினைபுனத்தை மேயவரும் மான் எனக் கருதுகின்றனர். உடனே வானத்தில் வில் வடிவமாகக் காணப் பெறும் தனுர் ராசியைக் கைவில்லாகக் கொண்டு அம்பு எய்ய முயலுகின்றனர்.

கொல்லைக் குறவர் குளிர்மதிமா னைக்ககன
வில்லைக் குனித்தெய்யும் வேங்கடமே! (21)

என்பது திவ்வியகவி புனைந்து காட்டும் சொல்லோவியம். அமபுலியில் வாழும் மான் வேங்கடமலையில் அதிரும் குரலையும், திறந்த வாயையும் கொண்ட வெம்புலியைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது. இதனை,

அம்புலியில் வாழ்மான் அதிரும் குரற் பகுவாய்
வெம்புலியைக் கண்டேங்கும் வேங்கடமே! (32)

என்ற திவ்வியகவி காட்டும் சொல்லோவியத்தில் கண்டு மகிழலாம்.

திருவேங்கடமலையில் ஓங்கி வளர்ந்துள்ள மரக்கொம்பொன்றில் தேன்கூடு கட்டப் பெற்றுள்ளது. வானத்தில் செல்லுகின்ற பிறைச்சந்திரனது வளைந்த வடிவமான கொம்பு