பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அத்தேனிறாலில் பட்டு அது உடைகின்றது. அதிலிருந்து ஒழுகும் தேன் வானத்திலுள்ள அதற்கு நேராகக் கீழே வந்து பொருந்தும் குடவடிவமான கும்பராசியில் நிறைகின்றது.

ஒண்கொம்பில் தேன்இறால்
ஊர்பிறைக்கோட் டாலுடைந்து
விண்கும்பம் வாய் திறக்கும் வேங்கடமே! (23).

இதிலுள்ள கற்பனை அற்புதம். திருவேங்கடமலையிலுள்ள மரக்கொம்பு கும்பராசிக்கு மேலுள்ளதென்றும் அதன்மீது பிறைச் சந்திரன் படப்பெறுவது என்றும் கூறியவதனால் மலையின் உயர்வையும் மலைவளத்தையும் காட்டியபடியாகும் இது. திருமலையில் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள கோனேரியில் கூனளவெண் குருகு ஒன்று 'ஒடுமீன் ஒட உறுமின் வரும் அளவும்' காத்திருக்கின்றது. விண்ணில் செல்லும் மீன் வடிவமான மீனராசியின் உருவம் நீரில் தெரியக் கண்டு அதனை உண்மையான மீன் என்று கருதிக் கொத்துகின்றது! மீன் கிடைக்காமையால் ஏமாந்து போகின்றது.

விண்மீன் மண்டலக்காட்சிகள் : இங்ங்னம் இராசிமண்டலக் காட்சிகளைக் காட்டிய கவிஞர் பெருமான் நம்மை விண்மீன் மண்டலத்திற்கு இட்டுச் செல்லுகின்றார். திருமலையில் ஆண்குரங்கு (கடுவன்) பெண்குரங்கு (மந்தி)மாக இரண்டு குரங்குகள். 'மண்மூலம்தா' என்று மந்திகடுவனைக் கேட்கின்றது. அதாவது மண்ணிலிருக்கும் கிழங்கை உண்பதற்குப் பெயர்த்தெடுத்துத் தருமாறு கேட்கின்றது. உடனே வானத்திலுள்ள 'மூலம்' என்ற நட்சத்திரம் (விண்மூலம் அதனைச் செவிமடுத்து தன்னைப் பிடித்துக் கொடுக்கச் சொன்னதாகக் கருதி அஞ்சி நடுங்குகின்றது. -

மண்மூலம் தாஎன்று மந்திகடுவதற்குரைப்ப
விண்மூலம் கேட்டேங்கும் வேங்கடவே! (25)

என்பது திவ்விய கவியின் சொல்லோவியம். இந்த வருணனையில் அம்மலை நட்சத்திர வீதிக்கருகில் உள்ளபடியையும் அம்மலைக் குரங்கு தேவகணமும் அஞ்சத்தக்க வலிவையுடைய தென்பதும் தெளிவாகும். திருவேங்கடமலையில் தொங்கவிடப் பெற்ற பொன்னாலாகிய ஊஞ்சலிலிருந்து கொண்டு மகளிர்