பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

17



உந்தி உந்தித் தள்ளி விளையாடுகின்றனர். அந்த ஊஞ்சல் அவிட்ட நட்சத்திரத்தில் படுங்கால் அங்கு அம்மகளிர் இறங்குகின்றனர்.

நாலவிட்ட பொன்னுசல் நன்னுதலார் உந்துதொறும்
மேலவிட்ட தொட்டிழியும் வேங்கடமே! (26)

என்பது கவிஞர் காட்டும் காட்சி.

அண்டங்கள் : வெட்ட வெளியும் அதனுள் அடங்கியிருக்கும் அண்டங்கள் யாவும் சேர்ந்ததுதான் இப்பிரபஞ்சம்; அகிலம், கோடிக்கணக்கான மீன் மண்டிலங்களும், அவற்றினின்று விடுபட்ட தனித்தனி மண்டிலங்களும் வால்மீன்களும் எரிமீன்களும் எண்ணற்றவை அதில் சுழன்று கொண்டிருக்கின்றன. இவற்றின் பிறப்பு, மூப்பு, சாக்காடு இவைபற்றிய செய்திகளை இன்றைய வானநூல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். மணிவாசகப் பெருமான் இந்த அகிலத்தைப்பற்றி,

அண்டப் பகுதியின் உண்டைப் பிழக்கம் அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.10 என்று கூறுவர். பேராசிரியர் ஜன்ஸ்டைன் அண்டத்தின் வெளி வளைந்துள்ளது என்றும், அது விரிந்து கொண்டே போகின்றது . (பிறக்கம்-Expanding) என்றும் கூறுவர். ஓர் இரப்பர் பலுானின் மேல் பல புள்ளிகளை வரைந்து அப்பலூனை ஊதினால் அது பெரிதாக ஆக ஆக (பெருக்கம் அடைய), அப்புள்ளிகளின் இடையிட்ட தூரமும் அகன்று விடுகின்றது. இதைப் போல விண்வெளியும் மீன் மண்டலங்களை ஏந்திக் கொண்டு அகன்று கொண்டே போகின்றது என்பது இன்றைய அறிவியலார் கண்ட முடிவு. மேற் கூறியவை போன்ற பல வான நூற் கருத்துகளைப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணலாம். .

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்: பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இந்த அண்டங்களைப் பற்றிக் கூறுவதைக் காண்போம். வானத்தில் எத்தனையோ அண்டங்கள் சுற்றிக் கொண்-


19. திருவா. திருவண்டப்பகுதி அடி (1-4)

த-2