பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் - அன்று

19


கூதிர், முன் பனி, பின்பணி, திரும்பவும் இளவேனில் என்று பருவங்கள் எல்லாம் ஒரு நியதிப்படி வளைய வளைய வருகின்றன. பிறப்பு-இறப்பு என்ற ஒரு சக்கரம் சுழன்ற வண்ணம் உள்ளது. ஒரு கடிகாரத்தைத் திறந்து பார்த்தால் வில்லோடு கூடிய மூல சக்கரத்துடன் இணைந்து பல்வேறு சக்கரங்கள் இணைந்து முட்களை வெவ்வேறு விதமாக இயக்கி விநாடி, நிமிடம், மணி என்று காட்டுவதை அறியலாம். ஆனால் எல்லாச் சக்கரங்களும் மூலசக்கரத்தின் உந்து ஆற்றலால்தான் இயங்கிச் சுழல்கின்றன என்பது தெளிவு.

ஞாலத்திகிரி, முதுநீர்த் திகிரி முதலியவற்றைச் சுற்றச் செய்யும் மூலத்திகிரி எது வென்றால் காலம் என்ற கண்ணுக்குத் தெரியாத கூறுபாடு அடையாத திகிரிதான். இருநூறு ஆண்டு கட்குமுன் 'தெள்ளிய ஆலின்சிறு பழத்தொருவிதை தெண்ணிர்க் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணிதாக' இருந்தாலும், காலச் சக்கரம் சுழன்று சுழன்று விதையில் (ஆலம் வித்தினுள்) இரசியமாக ஒளிந்து கொண்டிருந்த சிறிய ஆலமரத்தை மெல்ல மெல்ல இழுத்து வெளிக் கொணர்ந்ததால் இன்று அது மிகப் பெரிய ஆலமரமாக 'அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படையொடு ஒரு மன்னன் தங்க நிழலாக' உதவுகின்றது. இங்ஙனமே இந்த அகிலத்து நிகழ்ச்சிகள் எல்லாம் காலச்சக்கரத்தின் சுழற்சியால் வெளிவந்தவையாகும். ஆகவே, நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் குத்திரதாரனாக இருப்பது காலம் என்ற திகிரி "ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி நடாத்தும் அந்தக் காலத்திகிரி" என்று சொல்லி அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாராட்டினார் அய்யங்கார்.

நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவைகளை நாம் அறிவோம். இவற்றோடு கலந்து பிரிக்க முடியாத நான்காவது அளவை ஒன்று உண்டு. அதுவே காலம் என்ற அளவை என்பதை அறிவியல் முறையில் நிலைநாட்டின பெருமை ஐன்ஸ்டைன் என்ற அறிஞருக்கு உண்டு. ஐந்தாவது அளவை ஒன்றிருப்பதாக ஊன்பென்ஸ்கி என்ற இரஷ்ய அறிஞர் இயம்புகின்றார். அறிவியலறிஞர்கள் இன்னும் புதுப்புது அளவைகளைக் கண்டு பிடிக்கலாம். அவற்றிற்கும் இடங் கொடுக்க வேண்டும் என்று கருதியே 800 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த கவிஞர் அய்யங்கார்,