பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழில் அறிவியல் அன்றும் இன்றும்


உடனே அவர் கையிலிருந்த கோலத்திகிரி (சுதர்சனம் என்ற சக்கரத்தாழ்வான்) அவர் கையை விட்டு அகன்று சென்றது. வெறும் பாழிலே சுழன்று சுழன்று ஒரு மாபெரும் கோலத்தை இட்டுவிட்டு அவர் கையிலே வந்து அமர்ந்து கொண்டது. 'மூலத்திகிரி' இட்ட கோலத்திலே காலத்திகிரி பயபக்தியுடன் உருண்டு சென்றது. காலத்திகிரியினின்றும் பிறந்து, அதனோடு இணைந்து நிற்கும் ஞாலத் திகிரி, முதுநீர்த் திகிரி முதலிய திகிரிகளெல்லாம் நியதி தவறாமல் தொடர்ந்து சுழல்கின்றன. இந்தத் திகிரித் தொடரைப்பார்த்து, கடிகாரத்தினுள்ளிருக்கும் சக்கரத் தொடரை நாம் அநுபவிப்பதைப்போல், அநுபவிக்கின்றால் அய்யங்கார்.

ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்
கடல்க டைந்த
நீலத் திகிரி அணையார், அரங்கர்
நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநாளில்
கொண்ட கோலங்களே{{sup}20}}

படைத்துக் கொண்டே திருவிளையாடல்கள் புரியும் கையை 'நிறைந்த செங்கை’ என்கின்றார். அந்தக் கை எப்படிப் படைக்கின்றது? பாற்கடலைக் கடையக் கடையப் புதுப் பொருள்கள் தோன்றுகின்றன. விண்ணிலே தோன்றுகின்ற விண்மீன் கூட்டத்தைப் பாலோடை (Milky Way) என்கின்றனர் வான நூலார். இப்பாலோடையை நம்மவர் பாற்கடல்-திருப்பாற் கடல்-என்கின்றனர். இப்பாற் கடலின் தனிச்சிறப்பைப் பற்றித் தற்கால அறிவியலறிஞர்கள் அதிசயித்த வண்ணம் உள்ளனர். பேரண்டத்தில் வேறெங்கும் நடக்காத ஒரு நாடகம் நடந்த வண்ணம் உள்ளது. மற்ற இடங்களிலெல்லாம் ஒரு பொருள் உருவம் மாறி மற்றொரு பொருள் உண்டாகின்றது; சூனியத்திலிருந்து ஒரு பொருளும் உண்டாவதில்லை. ஆனால் பாலோடையில் மட்டிலும் விதி விலக்காக ஒன்று நடைபெறுகின்றது என்கின்றனர் அறிவியலறிஞர்கள். வெறும் பாழியிலிருந்து


20. திருவரங்கத்து மாலை-84