பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

23



அஃதாவது இன்மையிலிருந்து-நீரிய அணுக்கள் (Hydrogen atoms) பாலோடையில் எப்படியோ படைக்கப் பெறுகின்றன. இந்த அற்புதம் விளங்காப் புதிராகவே உள்ளது. தற்கால அறிவியலறிஞர்கள் வியந்த வண்ணம் உள்ளனர். கோலத் திகிரியைத் திருக்கையில் தாங்கிக் கொண்டு பாலோடையில் அறிதுயில் கொள்ளும் அந்த நீலத்திகிரி அனையாருக்கே அது வெளிச்சம்.

பாரதியார் : நம் காலத்தில் வாழ்ந்த பாரதியார் இன்றைய அறிவியற் கருத்துகளை ஒரளவு புரிந்து கொண்டு அண்டத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

..............................................................

நக்க பிரானருளால்-இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள்-வளர்
தொகை பல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்?-புவி
எத்தனை உளதென்ப தியாரறிவார்!

நக்க பிரானறிவான்;-மற்று
நானறி யேன்பிற நரரறியார்;
தொக்கபே ரண்டங்கள்-கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்-ஒளி
தருகின்ற வானமோர் கடல்போலாம்;

அக்கட லதனுக்கே எங்கும்
அக்கரை இக்கரை யொன்றில்லையாம்
இக்கட லதனகத்தே-அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்; -திசைத்
தூவெளி அதனிடை விரைந்தோடும்
மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்21


21. பா.க தோத்.பா. கோமதியின் மகிமை-4,5,6.