பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அடுத்து அல்லாவைப் பற்றிக் கூறும்,

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி
கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை
யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமஞ்
செய்தருள் நாயகன்22

என்ற பாடற் பகுதியிலும் அண்டங்கள் குறிப்பிடப பெறுகின்றன.

மணிவாசகப் பெருமானின் கருத்தையும் இக்கால அறிவியலார் கருத்துகளையும் கலந்த பாடல்கள் இவை.

4. பொறியியல் (Engineering) : பண்டைத் தமிழர்கள் பொறியியலிலும் வல்லுநர்களாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு.

பெருங்கதையில் குறிப்பு : அக்காலத்தில் பொறிகளால் இயங்கிய ஊர்திகள் இயற்றப்பெற்றன என்று தெரிகின்றது. யூகி தான் செல்ல ஒர் இயந்திர ஊர்தியைப் பயன்படுத்தியதாகக் குறிப்பு கிடைக்கின்றது. இந்த ஊர்தி யவன வீரன் ஒருவனால் இயற்றப் பெற்றது. ஞாயிற்றின் தேர் விண்வெளியில் இயங்குவது போன்று வேகத்துடன் இயங்கக் கூடியது. அது யானை மருப்பாலான பலகைகளைக் கொண்டிருந்தது; இரும்பாலான இறகுகளைக் கொண்டிருந்தது; குதிரை முதலியன பூட்டப் பெறாமல் இயந்திரத்தினாலேயே இயங்கும் தன்மையைக் கொண்டிருந்தது. அதனை இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஊர்தியின் விசையாணியைத் தக்கவாறு சுழற்றி நாம் விரும்பும் திசையில் அதனைச்

செலுத்தலாம். ஆணியைக் கொண்டு இயங்கும் ஊர்தியாதலின் அஃது 'ஆணி வையம்’ என்று திருநாமம் பெற்றது. ஊர்தியை விரும்பும்போது பூட்டிக் கொள்ளவும், வேண்டாத போது உறுப்புறுப்புகளாகப் பிரித்துக் கொள்ளவும் முடியும். அவ்வாறு செய்வதற்குப் பயிற்சி பெற்றவர்கள் இருந்தனர். யூகி என்பான் புட்பக நகரத்தை அடைந்ததும் தான் இவர்ந்து சென்ற ஆணி


22. பா.க : அல்லா-1