பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

25



வையத்தைப் பிரித்து, பிறர் அறியா வகையில் பாதுகாப்பாக மறைந்து வைத்தான் என்று கொங்கு வேளிர் குறிப்பிடுவர்.23

சீவக சிந்தாமணி : சிந்தாமணியில் மயிற்பொறி ஒன்று குறிப்பிடப் பெறுகின்றது. சச்சந்தன் தன்னைப் பாதுகாத்தற் பொருட்டு ஒர் எந்திர ஊர்தியைப் புனையுமாறு ஒரு தச்சனை ஏவ,24 அவனும் ஏழு நாட்களில் 'மயிற்பொறி' ஒன்று சமைக்கின்றான்.25 இந்தப்பொறியை இயக்கும் முறைகளைச் சச்சந்தன் தன் மனைவி விசயைக்குக் கற்பிக்கின்றான்26 அந்த மயிற் பொறியின் இயக்கத்தை,

பண்தவழ் விரலில் பாவை
பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து
விசும்பிடைப் பறக்கும்; வெய்ய
புண்தவழ் வேற்கண் பாவை
பொறியிடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து
கால்குவித் திருக்கு மன்றே.27

என்ற பாடலால் காட்டுவர் ஆசிரியர்.

அந்தப்புரத்தைக் கட்டியங்காரனின் சேனை வளைத்துச் சூழ்ந்து கொண்டபோது கருவுற்ற விசயையைச் சச்சந்தன் மயிற்பொறியிலேற்றி அவளைத் தப்புவிக்கின்றான்.28 சச்சந்தன் அந்தப்புரத்தினின்றும் புறம்போந்து கட்டியங்காரனோடு பொருது மாய்கின்றான். கட்டியங்காரனின் வெற்றி முரசொலியைக் கேட்டு விசயை மயிற்பொறியை முடுக்கி நடத்தமாட்டாமல் மூர்ச்சிக்க அப்பொறி அப்பாற் செல்ல மாட்டாமல் அந்நகரத்தைச் சார்ந்த மயானத்தில் இறங்குகின்றது.28 விசையைக்கும் சுபகாலத்தில் ஓர் மகவு பிறக்கின்றது.


28. பெங்கதை-2.8; 2.9. காண்க.

24. சீவகசிந்.233

25. க்ஷ --235

26. க்ஷ --238

27. க்ஷ . 239

28. க்ஷ . 2 , 8

29. க்ஷ - 301