பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்




கன்னி யாரையின் ஒளியினிற்
கண்வழுக் குறுதல்
உன்னி நாடொறும் விலங்கினை
போதலை உணரார்.33

என்று கூறுவான். 'கதிரவன் இராவணன் ஆணைக்கு அஞ்சி இலங்கை நகருக்கு மேலே தன் வெப்பக் கதிர்களை வீசுவதில்லை என்று கூறுவது தவறு; இலங்கை மதிலின் ஒளியினால் கண் கூசுவதால் விலகிச் செல்லுகின்றான்' என்பது இதன் கருத்து. நாம் இந்த இரண்டையும் கற்பனையாகவே கொள்ள வேண்டும். சூரியன் மகரரேகைக்குத் தெற்கே செல்லுவதில்லை என்ற அறிவியல் உண்மையைத்தான் கவிஞன் இங்ங்ணம் மாற்றி சுவை தரும்படி கூறுகின்றான் என்று கொள்ள வேண்டும்.

மேகநீர் மிக வெப்பமாக இருக்கும் என்பது அறிவியல் கண்ட உண்மை; கிட்டத்தட்ட 1000Cக்குக் குறையாது அதன் வெப்பம் இருக்கலாம். இரணியனுடைய சுகாநுபவத்தைக் கம்பநாடன்,

கொண்டல் கொண்டநீர் குளிப்பல்
என்றவன் குளிர்பான்34

என்று கூறுவான். மேக நீர் மிகவும் வெப்பமாயிருப்பதால் அதில் அவன் நீராடான் என்பது குறிப்பு. வேறு சில இடங்களில் நீராடான் என்று கூறி இதனையும் குறிப்பிடுகின்றான் கவிஞன்.

5. இயற்பியலும் வேதியியலும்: இயற்பியல்பற்றியும் ஒரு சில கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் ஊடுருவிக் கிடக்கின்றன.

காதல் கொண்டனை போலும் மண்மீதே
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டி னாள் இதில் ஐயமொன் றில்லை
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை என்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்35


38, ஷ - ஷ -21.

34. கம்ப. யுத்த. இரணியன்வதை-4

35. பா. க: தோ. பா: ஞாயிறு வணக்கம்-3