பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


சேமித்து வைக்கும் நிகழ்ச்சிதான் ஒளிச்சேர்க்கை என்பது. தாவரங்கள் கதிரவன் ஒளியைக் கொண்டே வாழ்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை கதிரவனிடமிருந்து ஒளியையும் வெப்பத்தையும் நேரே விழுங்குகின்றன. இந்த உலகில் தாவரங்களைத் தவிர வேறு எந்தப்பொருள்களும் கதிரவனிடமிருந்து நேரடியாக ஆற்றலைப் பெறும் திறன் அடையவில்லை. மனிதன் உட்பட விலங்கு, பறவை முதலிய பிராணிகள் யாவும் கதிரவன்காலும் வெப்பத்தையும் ஒளியையும் விழுங்காமல் அவற்றை விழுங்கிய தாவரங்களை விழுங்கிக் கதிரவனின் ஆற்றலைப் பெறுகின்றன. புலி, சிங்கம் போன்ற பாலுண்ணும் விலங்குகளோ கதிரவன் ஆற்றலை நேரே விழுங்குவதில்லை; தாவரங்கள் உண்டாக்கும் பொருள்களை விழுங்குவதுமில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்றுதின்று ஆற்றலைப் பெறுகின்றன. எனவே, இப்புவியிலுள்ள பிராணிகள் அனைத்தும் பகலவனிடமிருந்து ஆற்றலைப் பெறுகின்றன என்பதை அறிகின்றோம். இதன் அறிகுறியாகத்தான் தமிழர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் விழா : கதிரவன்தான் இவ்வுலக வாழ்க்கைக்கு உயிர் நாடியாக அமைகின்றான். இந்த அறிவியல் உண்மையினை அநுபவமாகக் கண்ட இளங்கோஅடிகள் என்ற கவிஞர் பெருமான்,

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திடரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.{{sup}36}}

என்று தாம் இயற்றிய காவியத்தில் மங்கலவாழ்த்துப் பாடலாக வெளியிட்டார். 'கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பில் திளைத்த நக்கீரர் பெருமானும்,

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிற37.

என்று தம் திருமுருகாற்றுப் படையைத் தொட்ங்குகின்றார். 'உலகம்’ என்பது சீவான்மாக்களை உணர்த்துகின்றது. 'பலர்'


36. சிலப்-மங்கலவாழ்த்து -அடி 4-6

37. திருமுருகாற் அடி 1.2.