பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

31



என்பது எல்லாச் சமயத்தாரையும் குறிக்கின்றது. ஆற்றலின் மூலமாக-ஆதி மூலமாக-விளங்கும் கதிரவனே 'பொங்கல் விழாவின் கடவுளாக-உழவர்கள் போற்றும் சூரிய நாராயணன் என்ற தலைவனாக,-விளங்குகின்றான்.ஒவ்வொரு ஆண்டிலும் உழவின் பயனாக புதியனவாகப் பெற்ற பொருள்களை ஆண்டவன் திருவடியில் காணிக்கையாக வைத்துத் தம்நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர் உழவர்பெருமக்கள்; பொங்கல் விழாவினைப் பூரிப்புடன் கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் 'சூரிய நாராயணனே' வழிபடு கடவுள். பொங்கலே அவனுக்குச் சமர்ப்பிக்கும் நைவேத்தியப் பொருள்.

பொங்கல் : கதிரவனிடமிருந்து இயற்றப்பெற்ற ஆற்றல் (அணுவாற்றல்) தாவரங்களின் மூலம் பாய்ந்து பல்வேறு பொருள்களைத் தோற்றுவிக்கின்றன . இப்பொருள்கள் யாவும் ஒன்று சேர்ந்து பொங்கல் வடிவில் காட்சி அளிக்கின்றன. பொங்கலிலுள்ள பொருள்கள் யாவும் உழவன் தாவரங்களின் மூலம் பெற்றவை; நெய் தாவரங்களை உண்ட பசுவின் மூலம் அடைந்த பொருளாகும். பொங்கல் வடிவமாக உள்ள ஆற்றல், ஆற்றல் வடிவமாகவுள்ள ஆண்டவனுக்குப்-கதிரவனுக்குப்- படைக்கப்பெறுகின்றது. இயற்கை வாழ்வில் தோய்ந்த தமிழர்களின் பொங்கல் விழா அறிவியல் உண்மைகள் அடங்கிய ஒரு பெருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. ஆந்திரர்கள் பொங்கல் விழாவை 'பெத்த பண்டுக' (பெரிய பண்டிகை) என்பர். அணுயுகத்தில் வாழும் நமக்கு அஃது அணுவின் தத்துவத்தை ஒருவாறு விளக்கி நிற்கின்றது. இந்த அடிப்படையில்-விளக்க ஒளியில்-மேலே குறிப்பிட்ட பாரதியாரின் பாடலுக்குப் பொருள் கண்டு மகிழலாம். கவிஞனின் ஆழ்ந்த பார்வை நமக்குப் புலனாவதையும் காண்கின்றோம். ஞாயிறுவணக்கத்தின் மெய்ப்பொருளையும் எண்ணி எண்ணி உணர்கின்றோம்.

வேதியியல் : ஆதியில் இயற்கையை ஆராயத் தொடங்கின மனிதனுக்கு ஒர் உண்மைப் புலப்பட்டது. ஒன்றாய் இருந்த விதை வேராய், அடிமரமாய், கிளையாய், கொம்பாய், கவடாய், இலையாய், பூவாய், காயாய் என்று பலவகையாய் மாறுவது போலவே, வித்தென அருவமாய் நின்றவை மரம் என