பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


 உருமாறியதாக அவன் நினைத்தான். இக்கொள்கைக்குப் பரிணாம வாதம் என்று பெயர்; கூர்தல் அறம் என்றும் இதனை வழங்குவர். உலகில் எதனை அடிப்படை என்பது? மண் என்றனர் சிலர்; நீர் என்றனர் பிறர்; தீ என்றனர் ஒரு சாரார்; காற்று என்றனர் பிறிதொரு சாரார்; வேறு சிலர் வான் என்றனர். இந்தச் சண்டையில் கலந்துகொள்ள அஞ்சிய சிலர், தென்காசி வழக்காக, ஐந்தும் அடிப்படை என்றனர். இத்தகைய கொள்கையை வற்புறுத்தியவர் அரிஸ்டாட்டில் என்பார். தொல்காப்பியரும்,

நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்39

என்று கூறினர். இதனையே கம்ப நாடனும்,

பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்40

என்று கூறுவான். அரிஸ்டாட்டிலின் கொள்கைப்படி நான்கோ ஐந்தோ தனிப்பொருள்கள்; தனிமங்கள். மற்றவை யாவும் தனிமங்கள் பலவகையாகச் சேர்வதால் உண்டாகும் சேர்க்கைப் பொருள்கள். இப்படிக் கலப்பதனைப் 'பஞ்சீகரணம்’ என்று வேதாந்தம் விளம்பும். இவ்வாறு கலக்கும் பொருள்களை அறிவியலார் தனிமங்கள் (Elements) என்று பேசுவர்.

அனுபற்றிய கருத்து: இயற்பியலின் ஒருபிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக் கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்றிருப்பது அணுவியலாகும். அணுபற்றிய ஒரு சில குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. விநாயகரகவலில் ஒனவையார் வாக்காக,

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன்


39. தொல் பொருள்-மரபு-9.

40. கம்பரா. சுந்தர-காப்பு