பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

33




அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தில் நிலையறி வித்து
தத்துவ நிலையைத் தந்துனனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சர்னே 41

என்ற பாடற்பகுதியில் 'அணுவிற் கணுவாகி’ என்ற இறைவன் நிலை காட்டப்படுகின்றது. திருக்குறளில்-குறள்வடிவான சிறிய பாடல்கள் அடங்கிய நூலில்-உலகிலுள்ள எல்லாப் பொருள்கள் பற்றிய கருத்துகளும் அடங்கியுள்ளன என்பதை,

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
சிறுகத் தறித்த குறள் 42

என்ற குறட்பாவில் கண்டு மகிழலாம். இதுவும் ஒளவையார் வாக்கேயாகும். ஆனால், நம்முடையக் இலக்கிய வரலாற்றில் இரண்டு மூன்று ஒளவையார்கள் காணப்படுகின்றனர்.

கம்பன் கருத்து; இரணியவதைப் படலத்தில் இரணியனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெறுகின்ற உரையாடலில் அனுபற்றிய கருத்து அடிபடுகின்றது. 'நீ சொல்லும் நாராயணன் எங்கு இருக்கின்றான்?' என்று இரணியன் பிரகலாத்னைக் கேட்க, அதற்கு அவன்,

சாணிலும் உளன் ஓர் தண்மை
அணுவினைச் சதகூறு இட்ட
கோனிலும் உளன்...43

என்று விடையிறுக்கின்றான். இங்கு அணு என்பது ஒரு சிறிய பொருள்; அதன் நூறில் ஒரு பகுதி 'கோண்’ என்பது என்ற கருத்துகள் குறிப்பிடப் பெறுகின்றன.

பிறிதோர் இடத்திலும் இக்கருத்து-அணு சிறிய பொருள்-என்ற கருத்து வருகின்றது. இலக்குவன் கணையால் மேகநாதன் இறந்துபடுகின்றான். மண்டோதரி புலம்புகின்றாள்.


41. விநாயகர் அகவல் (6 4–71)

42. திருவள்ளுவ மாலை-61

43. இரணியன் வதை-124

த-3