பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் அன்று

35



கொள்கையையே பேசுகின்றன. வைசேடிக மதத் தலைவராகிய கணாதர், 'அணு விழுங்கியார்' என்றே சாட்டுப் பெயரால் வழங்கப் பெறுகின்றார். -

பரஞ்சோதியார் கருத்து : திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதியார்,

அண்டங்கள் எல்லாம் அணுவாக
அணுக்கள் எல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாய்ச்
சிறிதாயி னானும்
அண்டங்க ளுள்ளும் புறம்புங்
கரியாயி னானும்
அண்டங்கள் ஈன்றாள் துணைஎன்பர்
அறிந்த நல்லோர்46

என்று கூறுவர். இதில் அறிவியல் அநுபவ இயலாக முகிழ்த் துள்ளமையைக் கண்டு மகிழலாம்.

தாயுமானவர் : ஊழியின் முடிவில் இந்த அகிலம் முழுவதும் அணுத் தத்துவமாக மாறும் (involution) என்பதையும், மீண்டும் படைப்புக் காலத்தில் (Evolution) அஃது அண்டங்களாக வடிவெடுக்கும் என்பதையும் மெய்யுணர்வு பெற்ற தாயுமான அடிகள்,

செகத்தை யெல்லாம் அணுவளவும்
சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை; அணுத்
திரளை எல்லாம்
மகத்துவமாய்ப் பிரமாண்ட
மாகச் செய்யும்
வல்லவா நீநினைத்த
வாறே யெல்லாம்.47

என்று இரத்தினச் சுருக்கமாக- விளக்குவர். இந்த உண்மையை இன்றைய அறிவியலறிஞர்கள் புலன் உணர்வைப் பன்மடங்கு பெருக்கும் கருவிகளைக் கொண்டு உணர்த்தியுள்ளனர். நாம்


46. திருவிளையாடல்-பாயிரம்-செய்-6

47. தா. பா; தந்தை தாய்-6