பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழில் அறிவியல்—அன்றும் இன்றும்


 காணும் பொருள்கள் யாவும் (அணுத் திரளைகளேயன்றி) வேறொன்றுமில்லை என்பதை விளங்கவும் உரைத்துள்ளனர்.

பாரதியார் : பாரதியார் இந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர். தற்கால அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பற்றி ஒரளவு அறிந்தவர். அவர் கூறுவார்:

இடையின்றி அணுக்கலொம் சுழலும்என
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலும் என
வானூலார் இயல்பு கின்றார்.48

என்று. இது மூன்றாவது-அடிமைச் சருக்கத்தில் கலைமகள் வணக்கமாக வருவது.

தொலைக்காட்சி : சிந்தாமணி, பாரதம், சஞ்சீவி பருவதத்தின் சாரல் ஆகிய மூன்று இலக்கியங்களில் தொலைக்காட்சி சாதனம் போன்ற ஒரு சாதனம் இயங்கி வந்த குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றைக் காண்போம்.

சிந்தாமணியில் : சீவகன் தன்னை இன்னான் என்று புலப்படுத்திக் கொள்ளாமல் கந்துகடன் வீட்டில் வளர்ந்து வருங்கால் அவனுக்கு நந்தட்டன் முதலிய நண்பர்கள் பலர் ஏற்படுகின்றனர். இவர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டில் பல் அற்புதச் செயல்களின் நாயகன் ஆகின்றான். அவற்றில் ஒன்று அசனி வேகம் என்ற யானையின் செருக்கை அடக்கியது. இந்தச் செய்தியைக் கட்டியங்காரனால் அறிகின்றான். அதன் பிறகு சீவகன் கட்டியங்காரனால் சிறைப் படுத்தப்படுகின்றான். பின்னர்ச் சுதஞ்சனன் என்னும் தேவன் ஒருவன் துணையால் சிறையினின்றும் தப்பி விடுகின்றான். இங்ங்னம் தப்பியவன் பதுமை, கேமசரி, கனகமாலை இவர்களை ஒருவர்பின் ஒருவராக மணந்து அவர்களிடம் இன்பம் நுகர்ந்து வழக்கம்போல் அவர்களை விட்டுப் பிரிகின்றான்.

சிறையினின்று தப்பிய சீவகன் யாண்டுளான் என்பதை நந்தட்டன் முதலிய அவனுடைய நண்பர்கள் அறியக்கூட வில்லை. நாடெங்கும் தேடியும் அவனைக் காணாது காந்தர்வ தத்தையை அடைகின்றனர். அவளோ தன்னுடைய விஞ்சையின்


48. பாரதி : பாஞ்சாலி சபதம்-206