பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்—அன்று

37



மகிமையால் சீவகன் செயல்களை அறிந்து சிறிதும் வாட்டமின்றி இருக்கின்றாள். அங்ங்னம் அவள் வாட்டமின்றி இருத்தலின் காரணத்தை வினவுகின்றான் நந்தட்டன்.

கொதிமுகக் குருதி வைவேல்
குரிசிலோ நம்மை உள்ளான்;
விதிமுக மணங்கள் எய்தி
வீற்றிருந் தின்பம் உய்ப்ப
மதிமுகம் அறியும் நாமே
வாடுவ தென்னை49

என்று பதிலிருக்கின்றாள். ஊழ்வினைப் பயனால் சீவகன் பலரை மணந்து கவலையின்றிக் காலங் கழிக்கின்றான் என்று அவள் அவர்கட்குக் கூறுகின்றாள். பின்னர் நந்தட்டன் தனக்கு அடிமைப்பட்டால், தான் சீவகனை அவனுக்குக் காட்டுவதாகக் கூறுகின்றாள். அவனும் எழுமையும் அடிமையாக இருப்பதாக ஒப்புக்கொள்கின்றான். உடனே காந்தருவதத்தை,

மாண்டதோர் விஞ்சை யோதி
மதிமுகம் தைவந் திட்டாள்;
நீண்டது பெரிது மன்றி
நினைத்துழி விளக்கிற் றன்றே50

இங்கு ஒதிய விஞ்சை, 'மதிமுகம்' என்பது, இஃது ஒரு வித்தை. வித்தைகளுள் மகாவித்தை 500 உம் க்ஷுல்லக வித்தை 700 உம் விஞ்சையர்க்குரியன என்றும், மதிமுகம் என்பது அவற்றுள் க்ஷுல்லக வித்தையைச் சார்ந்தது என்றும் கூறுவர். இந்த வித்தை 'ஆபோதினி' என்று ஸ்ரீபுராணத்தில் கூறப்பெறுகின்றது. காந்தர்வத்தை 'மதிமுகம்' என்ற விஞ்சையை ஒதி மதி போன்ற தன் முகத்தைத் தடவியவுடன்,

பொற்புடை அமளி யாங்கன்
பூவனைப் பள்ளி மேலான்
கற்பக மாலை வேய்த்து
கருங்குழல் கைசெய்வானை51


49. சீவகசிந்.1708

50. சீவகசிந். 1709

51. சீவகசிந். 1710