பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழில் அறிவியல் அன்றும் இன்றும்



தான திருமார்பிலணிந்த திருமாலை மின்னல் போன்றிரா நின்றது" என்கின்றாள். "இவர் பொன்; மேனி மரகதத்தின் பொங்கிளஞ் சோதி; அகத்து ஆரம் மின்" என்று மூன்று வாக்கியமாக எடுத்துக்காட்டுவார் பிள்ளையமுதனார் என்ற ஆசாரியர்.

பரம வைதிகர் என்றும் விஷயாந்தரங்களில் சிறிதும் கருத்தில்லாதவர் என்றும் தோன்றும்படி வேதங்களை உருச்சொல்லிக் கொண்டிருந்தார் போலும். இதனால் "இவர் வாயில் நல்வேதம் ஒதும் வேதியர்” என்கின்றாள்.

மேன்மையைப் பார்த்தால் தேவர்களோடொக்கச் சொல்லலாம்படி இருந்தார். ஆகவே "வானவர் ஆவர்" என்கின்றாள்.

"வடிவழகைக் பார்த்தால் அரசர்களுடன் ஒப்பச் சொல்லலாம். மேன்மையைப் பார்த்தால் வானவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். ஆகவே, இன்னாரென்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையே தோழி!' என்கின்றாள்.

தோழியானவள் தலைவியை நோக்கி, "நங்காய் அது இருக்கட்டும். நீ அவரை ஏறிட்டு நோக்கினாயா? அவர் நின்னை நோக்கினது உண்டோ?" என்று வினவ, அதற்கு அவள் "கேளாய், அதனையும் சொல்லுகின்றேன். "என்னையும் நோக்கி, என் அல்குலும் நோக்கி, ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்" என்கின்றாள். "மர்மங்களின் கடாட்சியாநின்றார்; பார்த்த பார்வை ஒருகால் மாற வைக்கிலர்" என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்.

"நம்மைப் பாங்காக அநுபவிப்பதற்குக் குறுப்பான பக்தி இவ்வாழ்வார்க்கு முதிர்ந்ததோ' என்று எம்பெருமான் ஆராய்ந்தமையைச் சொல்லியதாக இதனைக் கொள்ளவேண்டும். இபாகத்திற்குக் கொங்கை முதலிய உறுப்புக்கள் எப்படி இன்றியமையாதனவோ அப்படி பகவதருபவத்திற்குப் பரபக்தி, பரஞானம், பரமபக்தி நிலைகள் இன்றியமையாதனவாதலால் உள்ளுறையில் (ஸ்வாப தேசத்தில்) அவற்றைப் பொருளாகக் கோள்ள வேண்டும்.