பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

45



"அவர் நின்னை நோக்கின போது நீ செய்த தென்?" என்று தோழி கேட்க, "அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்." என்கின்றாள் தலைவி. "அவர் பார்த்த பார்வையெல்லாம் எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது; ஆனால் இந்த நிலைமையை நம் அன்னை காண்பாளாகில் என்ன பாடுபடுத்துவளோ என்று அஞ்சி நிற்பதே என் கருமமாயிற்று” என்கின்றாள். "நான் பதறி மேல் விழுவேன்; இதனைத் தாய் நோக்கினாலாகில் என்னாகுமோ? என்று அஞ்சி ஒழிந்தேன்" என்பது குறிப்பு.

நம்மாழ்வார் : நம்மாழ்வார் திருவாய் மொழியிலும் உருவெளித் தோற்றம் பற்றி ஒரு பதிகம் உண்டு. நம்மாழ்வார் நாயகி நிலையில் பராங்குச நாயகி என்று வழங்கப்படுவார். இங்குப் பிராட்டி நிலையிலுள்ள ஆழ்வாருக்குத் திருக்குறுங்குடி நம்பி கண்ணுக்கு நேர் காட்சியாகத் தோற்றாமல் நெஞ்சுக்கு நேர் காட்சியாகத் தோற்றுகின்றான். இதனால் பராங்குச நாயகிக்கு ஒரு தரிப்பு உண்டாயினும் அவனை அநுபவிக்கப் பெறாமையாலே ஆற்றாமைக்குக் காரணமாகி நோவுபட்டுக் கிடக்கின்றாள். உறவினர்கள் அனைவரும் அவளுக்கு இதஞ்சொல்லி மீட்கப் பார்க்கின்றனர். தலைவி சொல்லுகின்றாள்: "நான் ஏதேனும் பொருத்தமற்ற புருடனைக் கண்டு மோகிக்கின்றேனா? அழகுதானே உருக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியைஅன்றோ நான் சேவிக்கப் பெற்றது? அப்படிச்சேவிக்கப் பெற்ற அக்கணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோற்றுகின்றன. ஆதலால் நீங்கள் என்மீது சீறுவது பொருத்தமன்று" என்கின்றாள். மேலும்,

என்நெஞ்சினால் நோக்கிக் காணிர்
என்னை முனியாதே
தென்நன் சோலைத்திருக் குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
மின்னு நூலும், குண்டலமும்,
மார்பில் திருமறுவும்
மின்னு யூனும் நான்குதோளும்
வந்துஎங்கும் நின்றிடுமே60


60. திருவாய் 5.5 : 2