பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



என்பது இரண்டாம் பாசுரம். இதில் "நங்காய், திருக்குறுங்குடி நம்பியை நீ மாத்திரமா கண்டாய்? நாங்களும் பார்த்தோமே. நாங்களும் சேவித்திருக்கின்றோம்; ஆனாலும், உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது" என்று தாய்மார் சொல்ல, அதற்குத் தலைமகள் "என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்!" என்கின்றாள். "என் நெஞ்சினை இரவலாக வைத்துக் கொண்டு நீங்கள் நம்பியைச் சேவித்தீர்களாகில் இவ்வாறு என்னைப் பொடியமாட்டீர்கள்" என்கின்றாள்.

"நீ கண்டது எவ்வாறு?" என்று தாய்மார் கேட்க, "நம்பியை நான் கண்டபின் மேகத்தில் மின்னியது போலிருக்கின்ற யஜ்ஞோப வீதமும், பரந்தமின் ஓரிடத்திலே, கழித்தாற்போல் இருக்கின்ற மகரகுண்டலமும், வெறும்புறத்திலே ஆலத்தி வழியும் படியாயிருக்கின்ற ஸ்ரீவத்சமும் நாய்ச்சிமாரோடு கலக்கும்போது கழற்ற வேண்டாதபடியிருக்கின்ற ஆபரணங்களும், ஆபரணங்களுக்கு ஆபரணமாகக் கற்பகத் தரு பணைத்தாற்போலே இருக்கின்ற திருத்தோள்கள் நான்கும் 'உங்கள் இத அறிவுரையின் படியே செய்ய வேணும்' என்று தான் கடக்க நிற்கவும், அங்கேயும் சுற்றிச் சுற்றி என்னை நெருக்கா நின்றனவே! இதுவே நான் கண்ட காட்சிக்கு வாசி;" என்கின்றாள். இப்பதிகத்திலுள்ள எல்லாப் பாசுரங்களுமே உள்ளத்தை உருக்கும் காதல் அநுபவங்கள்.

கம்பராமாயணம் : மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் பக்தி வெறியின் பரிணாமங்களைக் கண்டோம். காதல் வெறியின் விளைவுகளை இப்போது காண்போம். காதல் வெறி எத்தனையோ விதமாக உருவெடுக்கும். காரணமின்றி மகிழ்ச்சியும் எக்களிப்பும் உண்டாகும்; துயரமும் துன்பமும் தலைக்காட்டும்; ஆறுதலும் ஆதரவும் தோன்றும். இன்னும் என்னென்னவோ செய்யும். கள் வெறியைவிடக் காதல் வெறி உறைப்புடையது. காதல்வெறி இராவணனையும் சூர்ப்பணகையையும் படுத்தினபாட்டைக் உருவெளிப்பாடாகத் தோன்றிய போது ஏற்பட்டநிலையைக்கம்பன் அற்புதமாகப்படைத்துக்காட்டுவான்.

உருவெளித் தோற்றம் அன்பினாலும் நிகழும்; அச்சத்தினாலும் உண்டாகும். சூர்ப்பணகையினால் சீதாப்பிராட்டியின்