பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

47


அழகை விரிவாகக் கேட்டறிந்த இராவணன் அப்பிராட்டியை இடைவிடாது நினைத்த காரணத்தால் ஒரு பெண்ணுருவம் அவனுக்கு உருவெளித் தோற்றமாகக் கானப் பெற்றது. அங்ங்னமே இராமனது அழகில் ஈடுபட்டு அவனை அணைய வேண்டும் என்று எண்ணிய சூர்ப்பனகைக்கும் ஓர் ஆணுருவம் உருவெளித் தோற்றமாகக் காணப் பெற்றது. இவை இரண்டும் அன்பினால் நிகழ்ந்தவை.

சூர்ப்பணகையால் வருணிக்கப் பெற்ற சீதாப்பிராட்டி இராவணனுடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிடுகின்றாள். காம உளைச்சலால் துன்பப்படுகின்றான். தான் பார்ப்பதெல்லாம் சீதையாகக் காணப்படுகின்றது. மனத்தில் இடைவிடாது நினைக்கப்பட்ட பொருள் அந்தப் பாவனையின் மிகுதியால் கண்ணுக்கு எதிரிற் காணப்பட்டாற் போலத் தோன்றுதல் இயல்பு. இதனால் இராவணன் சீதையை உருவெளித் தோற்றத்தில் காண்கின்றான். பவழக் கொம்பொன்று தன்மீது காள மேகத்தைத் தாங்கித் தொங்கின. இளங்காயின் இரட்டையைக் கொண்டதாய் ஒரு சந்திரனையும் தரித்துக் கொண்டு விளக்கு போல் விளங்குவதைக் காண்கின்றான். "இந்தப் பேரிருருளில் ஒளி நிறைந்த பெரிய ஒரு முழுமதியம் இரண்டு குண்டலங்களை அணிந்து கொண்டும் மிகக் கருத்த கூந்தலோடும் வந்து என் எதிரில் காணப்படுகிறதே. மோகத்தால் விளைந்த மயக்கமா? அல்லது அறிவுதான் வேறாயிற்றா?' என்கின்றான். "பருத்த தனங்களையும் அல்குலையும் (முதுகின் கீழ் உள்ள பகுதி) கொண்டு நிற்கின்ற இடையென்னும் உறுப்பை மாத்திரம் கண்டிலோம்; மற்றையுருவன் முழுதும் கண்டோம்" என்பான். "இப்போது காணப்படும் இந்தப் பெண் உருவைப் போல யான் உலா வந்த ஏழுலகங்களிலும் எந்தப் பெண்ணுருவையும் இதுகாறும் கண்டிலேன்; ஆதலால், இந்த வடிவம் என் தங்கை தெரிவித்த மங்கை வடிவமே" என்று கருதுகின்றேன். உடனே ஏவலரை நோக்கித் தன் தங்கையை அழைத்து வருமாறு பணிக்க, அவளும் காமக்கனல் சுடும் நிலையில் வருகின்றாள்.

பொய்ந்நின்ற நெஞ்சிற் கொடியாள்
புகுந்தானை நோக்கி
நெய்ந்நின்ற கூர்வாளவன் நேர்உற
நோக்கி, 'நங்காய்!