பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



மைந்நின்ற வாட்கண் மயில்நின்றென
வந்தென் முன்னர்
இந்நின்றவள் ஆம்கொல் இயம்பிய
சீதை?? என்றான்.61

வந்தவள் இராமனையே சிந்தையில் நிறுத்தினவளாதலின்,

செந்தா மரைக்கண்ணொடும் செங்கனி
வாயி னோடும்
சந்தார் தடந்தோளொடுந் தாள்தடக்
""கைக ளோடும்
அந்தா ரகலத்தொடும் அஞ்சனக்
குன்றம் என்ன
வந்தான் இவனாகுமவ் வல்வில்
இராமன் என்றாள்.62

இராவணன் சூர்ப்பணகையை நோக்கி,

பெண்பால் உருநான்இது கண்டது
பேதைநீ யீண்டு -
எண்பாலும் இலாததொ ராணுரு
என்றி என்னே
கண்பாலுறு மாயை கவற்றுதல்
கற்ற நம்மை
மண்பா லவரேகொல் விளைப்பவர்
மாயை?’ என்றான்.63

அதற்கு அவள் 'நீ கண்ட பெண்ணுரு உருவெளித் தோற்றமே? என, அதற்கு அவன் 'யான் கண்டது உருவெளித் தோற்றமே யாகுக! நீ இராமனைக் கண்டது என்னே?' என்று வினாவ, அவள், தான் இராமனிடம் கொண்ட காதலைக் கூறாமல், "எந்நாளில் அந்த இராமன் எனக்கு நீக்க முடியாத இத்தீமையைச் செய்தானோ அந்நாள் முதல் யான் அவனை மறந்திலேன்” என்று கூறுகின்றாள். மேலும் சீதையைக் கவர்ந்து வருமாறும் கூறுகின்றாள்.


61. கம்ப ஆரணின்-மாரீசன்வதை 148

62. க்ஷ. க்ஷ. க்ஷ -149

63. க்ஷ. க்ஷ-150