பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்- அன்று

49



நனவிலிமனம் : நனவிலிமன நிகழ்ச்சிக்கு (Unconscious mind) கம்பராமாயணத்திலிருந்து ஒர் எடுத்துக்காட்டு தரலாம். இராவணன் தன் மருந்தனைய தங்கையை காலகை என்பவளுடைய மக்களாகிய காலக்கேயர்களுள் வித்யுத் ஜிகுவன் என்ற அரக்கர் தலைவன் ஒருவனுக்கு மணம் புரிவித்திருந்தான். அந்த மணமக்கள் இளவயதினராக இருந்த காலத்தில் இராவணன் திசைகள் தோறும் சென்று வெற்றி முழக்கம் செய்துவந்தான். மைத்துனன் உறவு இராவணனுக்கு அடிபணியத் தூண்டவில்லை. மைத்துனர்களிடையே கடும்போர் நிகழ்ந்தது. சூர்ப்பணகையின் கணவன் கொல்லப்பட்டான். அதுமுதல் இராவணனுடன் இருக்கவேண்டிய வளானாள் கைம்பெண் சூர்ப்பனகை. 'நாத்தியின் கொடுமை' ஏற்படும் என்ற காரணத்தாலோ வேறு என்ன காரணத்தாலோ இராவணன் சூர்ப்பனகைக்குத் தண்டகவனத்தில் இருக்க இடம் அமைத்து அவளுக்குத் துணையாகத் தன் ஒன்றுவிட்ட இளவல்களாகிய கரதூடணர்களை அறுபதினாயிரம் வீரர்களடங்கிய சேனையுடன் காவலும் வைத்தான். இராமனைக் காதலித்த சூர்ப்பணகைக்கு நேர்ந்த அவமானத்தையும் (Nose-cut) இராவணனுக்குச் சூர்ப்பணகையால் சீதாப் பிராட்டியின்மீது ஊட்டப்பெற்ற 'காதல் போதை'யையும், அது காரணமாக இராவணன் இராமன் கணையால் மாய்ந்ததையும் நாம் அறிவோம். இராவணனை நினைந்து புலம்பும் வீடணன்,

கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்என்
றதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து
பல்லாலே இதழ்அதுக்கும் கொடும்பாவி
நெடும்பாரம் பழிதீர்ந் தாலோ?64

என்று வாய்விட்டு அரற்றுவதில் சூர்ப்பண்கையின் நனவியுளத்தின் போக்கினை வெளிப்படுத்துவதாகக் கருதலாம். இளமையில் இன்ப வாழ்க்கைக்கு ஊறுவிளைவித்த அண்ணனைக் கொல்வதற்குக் காரணமாக இருப்பதுடன் அவன் குலத்திற்கே காலனையும் கொண்டுவந்துவிட்டாளோ என்று விடனன் கருதுவதாகக் கொள்ளலாம். குர்ப்பனகையின் நனவிலியுளத்தின் செயலே இராவணவதத்திற்குக் காரணமாயிற்று என்று


64. கம்பரா. யுத்தகாண். இராவணன் வதை-225.

த-4