பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. நனவிலி யுளம் பற்றிய கருத்துகளை அடுத்த பொழிவில் (நாளைய பொழிவில்) விளக்குவேன்.

7. உயிரியல்(Biology): இன்று உயிரியல் துறையில் டார்வின் போன்ற அறிஞர்களால் குறிப்பிடப் பெறுவது கூர்தல் அறம் (Doctrine of Evolution) என்பது இதுபற்றி அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இல்லாமல் இல்லை. இத்தகைய கொள்கை போன்றதொரு கருத்தினை,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.65

என்று மணி வாசகப் பெருமானும் கூறியுள்ளார்.

பத்து அவதாரங்கள்: மீன், ஆமை, பன்றி நரசிம்மன், வாமனன், திரிவிக்கிரமன், பரசுராமன், தசரதராமன், கிருட்டிணன், (கற்கி) என்று பத்துத் திருமால் அவதாரங்களை படி வளர்ச்சிக் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர் அறிஞர்கள். நம்முடைய கல்வியறிவிற்கேற்பப் பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்து அறிவியற் கருத்துகளை எடுத்துக் காட்டுதல் இக்கால ஆய்வுப் போக்காகும்.

இனமாற்றம்: இயற்கையமைப்பில் இனமாற்றம் நிகழ்வதில்லை. மக்கள் இனத்தில் மக்களே தோன்றுகின்றனர். பறவை இனங்கள், விலங்கு இனங்கள், பூச்சி இனங்கள் இவற்றில் அந்தந்த இனங்களே தோன்றுகின்றன. இங்ஙனம் உயிரிகளின் வகை மாறாமல் வாழையடி வாழையாக இருந்து வருதலை இராமலிங்க அடிகள்,

வாழையடி வாழையென
வந்ததிருக் கூட்டம்
மாயினில்யான் ஒருவனன்றோ?"66


65. திரு வா. சிவபுராணம்-அடி (26-31)

66. திருவருட்பா-ஆறாந் திருமுறை - பிரியேனென்றல்-

செய் 4