பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்




பொருமியொரு மகவழும்;கண் பிசைந்தமுமேற்
றொருமகவு; புரண்டு வீழாப்
பெருநிலத்திற் கிடந்தமுமற் றொருமகவெங்
ங்னஞ்சகிப்பாள் பெரிதும் பாவம்

அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற்
றில்லையென அமுமால் ஓர்சேய்;
சிந்தாத கஞ்சிவார்க் கிலையெனக்கன்
னையெனப்பொய் செப்பும் ஒர்சேய்;
முந்தார்வந் தொருசேய்மி சையப்புகும்போ
தினிலோர்சேய் முடுகி யீர்ப்ப
நந்தாமற் றச்சேயும் எதிரீர்ப்பச்
சிந்துதற்கு நயக்கும் ஓர்சேய்.67

என்று கவிஞர் வருணித்திடுவர்.இதனால் குழவிகளில் பலர்-ஏன், அனைவருமே-கிட்டத்தட்ட ஒத்த சிறுவயதினராயிருந்தனர் என்று கொள்ளவேண்டும். அப்படிக் கொண்டால் சுசீலை அம்மையாருக்குப் பல குழவிகளையுடைய பல குழந்தைப் பேறுகள் ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்றும் கொள்ளல் வேண்டும். அங்ங்னம் கொண்டால்தான் கவிஞரின் பாடல்கட்கு விளக்கம் தருதல் இயலும்; கற்பனையும் பொருந்துவதாக அமையும்.

பால் மாற்றம்: உயர்ந்தவகைப் பிராணிகளிடம் பால் திருப்பங்கள் (Sex reversals) ஏற்படுதலைக் காணவில்லை. ஆயினும் சில சமயம் அவற்றிடம் இயல்பிகந்த பால் திருப்பங்கள் பல்வேறு நிலைகளில் நடைபெறுவதுண்டு. கோழிப் பண்ணைகளில் இத்தகைய நிகழ்ச்சிகளைக் காணலாம். சில சமயம் அமைதியாக முட்டையிட்டுக் கொண்டிருக்கும் பல பெட்டைக் கோழிகள் திடீரென்று சேவலாக மாறிவிடுகின்றன. அவற்றிடம் குதிமுட்கள், வாலிறகுகள், 'கொக்கரக்கோ’ என்று காமக் கூவுதல் தோன்றுகின்றன. சில சமயம் ஆணுறுப்புகளும் காணப்பெறுகின்றன. சூற்பைகளில் (oVaries) உண்டாகும் கழலைகள் (Tumours) அல்லது வேறு அக நிலைக் குலைவுகள் இந்நிலைக்குக் காரணமாகும்; இவை 'பெண்' ஹார்மோன்களை அடக்கிப்


69. குசேலோ பாக்கியானம் - குசேலர்மேற் கடலை

யடைந்தது-செய் 70-71