பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

53


பெண்ணிடம் சாதாரணமாகக் குறைந்த அளவு இருக்கும் 'ஆண்' ஹார்மோன்களிடம் சுரப்பிக் கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுகின்றன. இதனால் ஓரளவு ஆணுறுப்புகளும் வளர்வதற்குச் சாத்தியமாகின்றது. சோதனைச் சாலைகளில் பெட்டைக் கோழிகளிடம் சூற்பைகளை நீக்கியோ அல்லது 'ஆண் ஹார்மோன்’களைச் செலுத்தியோ பல்வேறு நிலைகளில் இப்பால் திருப்பங்கள் உண்டாக்கப் பெறுகின்றன.

இத்தகைய பால் திருப்பங்கள் ஏற்பட்ட நிலைகள் பாரதத்தில் இரண்டு இடங்களில் காணப் பெறுகின்றன.

(1) காசிராசன் புத்திரிகள் அம்பிகை அம்பாலிகை, அம்பை என்ற மூவரையும் வீடுமன் கவர்ந்து தன் தம்பியர் விசித்திர வீரியன், சித்திராங்கதன் என்போருக்குத் திருமணம் முடிக்கத் திட்டம் இட்டான். ஆனால் அம்பை இவர்களை மணக்க மறுத்தாள்; தன் மனம் சாலுவன் என்பான்மேல் உள்ளது என்று தெரிவிக்கவே, வீடுமன் அவளை அவன்பால் அனுப்பி வைத்தான். ஆனால் சாலுவன் 'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய்தொடேன்’ என்று அவளைப் புறக்கணித்தான். எனவே அம்பை மீண்டு வீடுமனிடம் மணம் வேண்டுகின்றாள். வீடுமன் தன் விரதம் கூறி அவளை மணக்க மறுக்கின்றான். பரசுராமனால் முயன்றும் பலன் இல்லை.உடனே 'வீடுமனை வெல்லும் சூரன் ஆவேன்’ என்று சூளுரைத்து தவம் இயற்றி இயக்கியின் அருளால் சிகண்டியாகின்றாள்; துருபதனுக்கு மகனாகப் பிறக்கின்றாள்.

முயல்இலாமதி முகத்தினாள், ஒருவர்
முயல் அருந்தவம் முயன்றபின்,
புயல் இலாதமினல் ஒத்த மெய்யில்ஒளி
புரி இயக்கிதன் அருளினால்
மயில்அனாள்தனது வடிவு அகற்றிஇகல்
யாகசேனனது வயினிடைச்
செயலில் ஆறுமுகன் நிகர்எனத்தகு
சிகண்டிஆயினள் சிறக்கவே.70

வியாசபாரதத்தில் இவள் பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்து பூமியில் விழுந்தவுடன் ஆணாக மாறினாள் என்று குறிக்கப்


70. வில்லிபாரதம். குருகுலச்சருக்கம்-152.