பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

55


ஒடிய வதனத்து உருப்பசி பணியால்
உறுவதற்கு ஒர்யாண்டு அமைந்த
பேடியின் வடிவம் தரித்தனன்-ஆண்மைக்கு
இமையவர் எவரினும் பெரியோன்!72

என்று கூறுவர். பிருகந்நளை விராடன் மகள் உத்தரைக்குப் பாங்கி ஆகின்றாள். பிற்காலத்தில் இவள் அபிமன்யுவை மணந்து விசயனுக்கு மருமகளாகப் போகின்றாள் என்பதை நாம் அறிவோம்.

கருமாற்றம்: பலராமனின் பிறப்பு கருமாற்றத்தால் நேரிட்டது. கம்சனுக்குப் பயந்து ஏழாவது முறை தேவகி கருவுற்றபோது அந்தக் கருவில் வளர்ந்து பிறக்கும் குழவியைக் கம்சனிடமிருந்து தப்புவிக்கவேண்டும் என்பது எம்பெருமானின் திருவுள்ளம். ஆகவே அக்கரு வாசுதேவனின் மற்றொரு மனைவியாகிய உரோகிணியின் கருப்பைக்கு மாற்றப் பெற்றுப் பலராமனாகப் பிறந்தது; இவனே கண்ணனுக்கு மூத்த பலராமன்; சங்க இலக்கியங்களில் 'நம்பி மூத்த பிரான்’ என்று குறிப்பிடப் பெறுபவன். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு (புதியது புனையும் ஆற்றல்) புராணத்தில் 'கதை போல்' அடங்கிக் கிடக்கின்றது. -

திருமணம்: திருமணம் என்பது ஒர் உயிரியல் இன்றியமையாமை (Biological necessity). இதில் இன்றியமையாத பகுதி 'சிற்றின்பம்' என்று நூல்களால் வருணிக்கப் பெறும். ஆணும் பெண்ணும் தக்க முதிர்ச்சி அடைந்ததும் அவர்களிடம் ஒன்று சேர்வதற்கான 'காமம்' அரும்புகின்றது. அஃது இருபாலாரையும் ஒன்று சேர்த்து வாழ்க்கை இன்பத்தைத் தந்து உலகை இடையறாது நடைபெறச் செய்யும் அற்புத ஆற்றலாக இயங்குகின்றது. ஆகவே, திருமணத்தை தெய்விக நிகழ்ச்சியாக (Divine institution) ஆகக் கருதி நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த திட்டம். ஆகவேதான் அஃது இன்றளவும் ஒரு திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எத்தனை கோலாகலம்! எத்தகைய விருந்து! எத்தனை வித சடங்குகள்! ஆயினும் இந்தத் தெய்விக உறவு 'வரதட்சிணை' என்ற பின்னணியில் ஒரு குதிரைப் பந்தயம் போல் ஒரு குதிரை வாணிகம்போல்


12. நாடு கரந்துறை சருக்கம்-16