பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


 வரையறைகளை வகுத்துக் காட்டியுள்ளனர்.77 அவற்றுள் சிலவற்றை மட்டிலும் ஈண்டு எடுத்துக்காட்ட விழைகின்றேன்.

மாதவிடாயின் பொழுது : மாதவிடாயின் பொழுதே சில இணைவிழைச்சு பெண்கள் புரியவிழைக்கின்றனர். சில ஆடவர்களும் அந்நாளில் உறவுகொள்ள இணைகின்றனர்; தமக்கும் விருப்பம் உண்டு என்று தெரிவிக்கின்றனர். இது பற்றிப் பண்டையோர் கருத்தினைத் தெரிவிப்பேன்.

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியிபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.78

என்பது ஆசாரக் கோவை. முதல் மூன்று நாட் கூட்டமும் நோய்க்கு இடமாதலானும், முதல் மூன்று நாளும் கருவமையாமையாலும் முதல் மூன்று நாட்கள் 'தீண்டாநாட்கள்’ ஆயின. இந்த ஆசாரக்கோவைச் செய்யுளை விளக்குவதுபோல்,

பூத்த காலைப் புனையிழை மனைவியை
நீரா டியபின் ஈராறு நாளும்
கருவயிற் றறூஉங் கால மாதலின்
பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்79

என்ற இலக்கண விளக்க நூற்பா அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் தலைவனின் பரத்தையிற் பிரிவில் தலைவிக்குப் பூப்பு நிகழின் தலைவன் எவ்வாறு ஒழுகுவான் என்பதைக் குறிப்பிடும்,

பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி
பூப்பின் பிறப்பா ரீரறு நாளும்
நீத்த்கன் றுறைல் அறந்தா ரன்றே80


77. இந்த ஆசிரியரின் "இல்லற நெறி" என்ற நூலில்

'திருமண வாழ்வில் உடல் நலம்' (4 கடிதங்கள்)
விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. ஆண்டுக் கண்டு
தெளிக.

78. ஆசாரக் கோவை-42

79, இலக்-அகத்திணை-நூற், 81

80. இறை. கள். நூற். 43