பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

59



என்ற இறையனார் அகப்பொருள் நூற்பாவின் உரையில் வாயில்களால் தலைவியின் பூப்பினை அறிந்த தலைவன் எவ்வாறு ஒழுகுவான் என்பதை நக்கீரர் இவ்வாறு விளக்குவர்: "... பூப்பு உணர்த்தப்பெற்ற தலைமகன், வாயிகளோடுஞ் சென்று தலைமகளிடத்தானாய், முந்நாளும் சொற்கேட்கும் வழி உறைவானாவது. 'முந்நாளும் சொற்கேட்கும்வழி உறைதற்குக் காரணம் என்னை?’ எனின், தலைமகன் பரத்தையர்மாட்டானாக முன்னின்ற பொறாமை உண்டென்று எய்தும். முந்நாளும் சொற் கேட்கும்வழி உறையவே நீங்கும். நீங்கியபின்றைக் கூடும். ஆகவே, கரு நின்றது மாட்சிமைப்படும். அது நோக்கி உணர்த்தப்பட்டது; அதனால் அறம் எனப்பட்டது. அல்லா விடில், தலை மகள் மாட்டு ஒரு பொறாமை தோன்றும் பரத்தையர் மாட்டு நின்று வந்தானென: அப்பொறாமை ஒரு வெகுளியைத் தோற்றுவிக்கும்; அவ்வெகுளி பெரியதோர் வெம்மையைச் செய்விக்கும்; அவ்வெப்பத் தினால் கருமாட்சிமைப்படாதாம;படாதாகவே, அறத்தின் வழுவும் என்பது. அதனால் முந்நாளும் சொற்கேட்கும் வழி உறையல்வேண்டும் என்பது. 'பூப்புப் புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிரும் நாளும் என்பது துணிவு' என்றார்க்கு,முந்நாளும் கூடி உறையப் பெறும் என்னோ எனின், பூப்புப் புறப்பட்ட ஞான்று தின்ற கரு வயிற்றில் அழியும்; இரண்டாம் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நின்ற கரு குறுவாழ்க்கைத்தாம்: வாழினும் திருவின்றாம். அதனாற் கூடப் படாது என்பது.

பூப்புமுதல் முந்நாள் புணரார்; புணரின்
யாப்புறு மரபின் ஐயரும் அமரரும்
யாத்த கரணம் அழியும் என்ப

எனப் பிறகும் ஒதினா ராகலான் என்பது."81 நக்கீரரின் இந்த உரைப் பகுதியினால் மாதவிடாயின்பொழுது இணை விழைச்சே கூடாதென்பது பண்டையோரின் விதி என்பது ஒருவாறு தெளியப்பெறும்.

இன்னும் தொல்லாசிரியராகிய தொல்காப்பியனாரும்,


81. இறை. கள. நூற். 43 இன் உரை.