பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rh|60||தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்}}



பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான82

என்ற கற்பியல் நூற்பாவால் விதி செய்திருப்பதையும் கண்டு தெளியலாம். "பரத்தையர் சேரியானாயினும் பூத்தோன்றி மூன்று நாள்கழிந்தபின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று" என்றவாறு. இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றும் காலம் என்ப என்று இளம் பூரணரும்; "பூப்பின் முன்னாறு நாளும் பின்னாறு நாளும் என்றும், பூப்புத் தோன்றிய நாள் முதலாகப் பன்னிரண்டு நாளும் என்றும், நீத்தல் தலைமகன் மேல் ஏற்றியும், அகன்றலைத் தலைவிமேல் ஏற்றியும் உரைப்பாரும் உளர். பூப்பு புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளும் கருத்தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்றாம் நாள் தங்கிய அது சில் வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளும் கூட்டம் இன்று என்றார்" என்ற நச்சினார்க்கினியர் கூறும் விளக்க உரைகளாலும் இது நன்கு தெளியப் பெறும். இன்று நடைமுறையில் பெரும்பாலான சமூகங்களில் மாதவிடாய் ஆகியுள்ள பெண்களைத் தனியாகவே ஒதுக்கி வைக்கின்றனர். விவிலிய நூலிலும் இவ்வாறு ஒதுக்கி வைக்கும் பழக்கம் குறிப்பிடப் பெற்றிருப்பதுடன், விலக்கான பெண்ணுடன் உறவு கொள்ளுதல் ஆபத்து என்றும், பாபம் என்றும் கூறப் பெற்றுள்ளது. ஆனால் ஜான்சன்-ஜான்சனின் Care Free சாதனங்கள் வந்த பிறகு அலுவலகங்களுக்குப் போகும் பெண்களும் படித்த பெண்களில் பெரும்பாலாரும் இந்த ஒழுக்க முறையைப் பின்பற்றுவதில்லை. 'விலக்கு’ என்ற கருத்தையே நினைவில் கொள்ளுவதில்லை.

கருப்ப காலத்தில் உறவு: பெரும்பான்மையான பாலுண்ணிகளிடம் பெண் கருவுற்றதும் அஃது ஆணைப் பாலுறவிற்கு ஏற்பதில்லை. அதனுடைய பால் செயல் கருப்ப காலத்திலும் குட்டிக்குப் பாலூட்டும் பருவத்தின் முதற்பகுதியிலும் நின்று போகின்றது. பழங்கால மனிதர்களிடமும் கருப்ப காலத்திலும் குழந்தை பால் பருகும் காலத்திலும் பாலுறவு கொள்வது தவறு என்ற பழக்கம் இருந்து வந்தது. பிரிஃபால்ட் என்ற அறிஞர் மாதவிடாயின் பொழுது ஏற்படுத்திய தடையைப்


82. தொல். பொருள் கற். 46 (இளம்)