பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் அன்று

61


 போலவே பெண்களே இத்தடையை முதன் முதலாகத் தொடங்கியிருக்க வேண்டும் என்றும், இப்பருவத்தில் பெண்ணின் காம உணர்ச்சி ஏறத்தாழ அமைதி பெற்றிருப்பதால் அதையே காரணமாகக் கொண்டு இத்தகைய பால் தடையை விதித்திருக்க வேண்டும் என்று கருதுவர். நாளடைவில் படிப்படியாக இக்கட்டுப்பாடுகள் புதிய பொருளைத் தாங்கிப் பயமும் திகிலும் கொள்ளக் கூடியனவாக மாறிவிட்டன. ஆயினும், அவற்றின் மூலகாரணம் யாதாக இருப்பினும், இன்றைய நாகரிக வாழ்க்கையில் இத்தடைகள் மறைந்தே போயின; கருப்ப காலத்தில் உறவு கொள்வதை மக்கள் தீங்கு தரும் என்றோ அல்லது பாபம் என்றோ கருதுவதில்லை. சுருங்கக்கூறின், நாகரிக வாழ்வில் மக்கள் விலங்கினும் கேடாக மாறி விட்டனர்!

கருவுயிர்த்தலுக்குப் பின் கலவி: சாதாரணமாக ஒரு பெண் கருவுயிர்த்த ஆறு வாரங்கள் வரையிலும் அவளிடம் பாலுறவு கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். பழங்காலத்தில் குழந்தை பால் குடிக்கும் வரையிலும் மனைவியிடம் கணவன் உறவு கொள்ளக்கூடாது என்ற விதியும் இருந்தது. சிலரிடம் தாய் குழந்தையைப் பராமரிக்கும் வரையிலும் பாலுறவு கொள்ளாப் பழக்கமும் இருந்து வந்தது. இக்காலம் மூன்றாண்டு வரையிலும் -ஏன்? அதற்கு மேலும்-நீடிக்கக் கூடியதாகவும் இருந்ததால்' கருவுற்ற பின் ஒரு பெண் சில ஆண்டுகள் பாலுறவு கொள்ளும் வாய்ப்பே இல்லாதிருந்தது; இதனால்தான் பரத்தையர் பிரியும் வழக்கமும் தமிழ்நாட்டில் இருந்தது போலும்! இத்தகைய குறிப்புகளைத் தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணலாம். .

சூதக ஒய்வின் பொழுது கலவி: சுமார் நாற்பத்தைந்து வயதில் பெண்களிடம் ஏற்படும் சூதக ஒய்வினால் அவர்களிடம் எத்தனையோ விதமான கோளாறுகள் நேரிடலாம். ஒருசில வற்றை ஈண்டுக் குறிப்பிடுவேன்.

சில பெண்களிடம் பெண்ணுருவமே மாறி விடுகின்றது; முகம் ஆண்முகம்போல் தோற்றமளிக்கின்றது. உடலெங்கும் 'ஊளைச் சதை' திரளுகின்றது. இந்த வகைச் சதைகள்